தமிழகத்தில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 16-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை […]

பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மத்திய அரசின், மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயில உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், 2025-26 -ம் நிதி ஆண்டில், 1,000 […]

காய்ச்சல் உள்ள மாணவர்கள் விடுமுறை எடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும், பள்ளிக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு, கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிக அளவில் இருப்பதால் மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க பள்ளி கல்வித்துறைக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சலுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மற்ற மாணவர்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது. இதனால், காய்ச்சல் உள்ள மாணவர்கள் […]

SSC Combined Graduate Level (CGL) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மொத்தம் 14,582 காலியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 7 முதல் ஏற்கப்படும். ஜூலை 9 முதல் 11 வரை திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். Tire-1 தேர்வு ஆகஸ்ட் 13 முதல் 30 தேதிகளிலும், Tire-2 தேர்வு டிசம்பரிலும் நடைபெறும். மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), ஜூன் 9, 2025 அன்று SSC CGL […]

திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலுவிடம் ரூ.11 லட்சம், அசோக்கிடம் ரூ.5.20 லட்சம் பெற்று அதிமுக ஐடி பிரிவு மாநில நிர்வாகி பிரசோத் என்பவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பிரசாத் மீது நுங்கம்பாக்கம் காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு […]

சூதுவாது அறியா சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்பு காட்டுவது திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துள்ளது என்பதை தானே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டுமே குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 56% அதிகரித்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளதாக வெளியாகியுள்ள […]

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட 12 பேருக்கு நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்தாண்டு அமலாக்கத் துறை […]

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 7 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 15-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இன்று ஈரோடு, […]

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற […]

சட்டப்பேரவை அறிவிப்பை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள 2000 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.2,500 மதிப்பில் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, […]