சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 420 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 470 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு […]

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 520 கி.மீ […]

மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா புயல். “வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 600 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் தொடர்ந்து நகர வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

பீகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025 கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலுக்கான அட்டவணையையும், இடைத்தேர்தல்களையும் அறிவித்தது. பீகார் தேர்தல்களில் வாக்குப்பதிவு முறையே நவம்பர் 6, 2025 மற்றும் நவம்பர் 11, 2025 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 126 (1)(b), அந்த வாக்குச் சாவடியில் எந்தவொரு தேர்தலுக்கும் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு […]

விஜய்க்கு பயிற்சியாளர்கள் அதிமுகவினர் தான் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் : டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டும் பிரச்சினைகளை சரி செய்யாமல் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தால், இந்த அரசுக்கு மக்கள் முடிவு கட்டுவர். அதிமுக, பாஜக கூட்டணி பலமாக இருக்கிறது. திமுக ஆட்சி […]

9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னையிலிருந்து […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன். கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழுவிடம், கரூர் டவுன் போலீஸார் மற்றும் […]

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். தமிழ் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறையில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். அந்த வகையில், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே, கந்த சஷ்டி என்றழைக்கப்படும். கந்த சஷ்டிக்கு முன் 7 நாள்கள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். கந்த சஷ்டி விரதம் கடந்த அக். 22ஆம் […]

சுபமுகூர்த்த நாளான இன்று மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ளதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாளான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக […]

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சியில் 2016-2017 முதல் 2020-2021 வரை 4 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மொத்த நெல் 1 கோடியே 13 லட்சத்து 51,469 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 22 லட்சத்து 70,293 மெட்ரிக் டன் மட்டுமே. ஆனால், திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 2021-ம் […]