முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்ட பயனாளிகளுக்கு மருந்து விநியோக சேவைகளை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகளை பெற்று வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் பிரத்யேக சேவையை முன்னாள் ராணுவ வீரர்கள் துறையுடன் இணைந்து அஞ்சல்துறை தொடங்கியுள்ளது.இந்த முன்முயற்சி திட்டத்தின் கீழ் கிராம நிலையிலான தொழில்முனைவோரின் பொதுச்சேவை மையங்கள் மூலமாக மருந்துகளை கொள்முதல் மற்றும் பேக்கேஜ் செய்து […]
தீபாவளியையொட்டி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பண்டிகைகால சிறப்புச் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்புச் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.தீபஒளி திருநாளில் குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வாடிக்கையாளர் முதல் நீண்ட கால சந்தாதார்கள் வரை தனிநபர் வாடிக்கையாளர் முதல் வர்த்தக நிறுவனங்கள் வரை என ஒவ்வொரு பிரிவினருக்கும் பண்டிகைகால சிறப்பு சலுகைகளை […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் காவல் துறை இணை மற்றும் ஆணையர்கள், சிஎம்டிஏ பொது மேலாளர், எம்டிசி துணை மேலாளர், […]
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் […]
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21.10.2025 அன்று விடுமுறை வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால், சென்னை, திருச்சி, ஓசூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. திங்கள் கிழமை தீபாவளி முடித்துவிட்டு, மீண்டும் […]
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2.0-வின் கீழ் கூடுதலாக 1.41 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-வின் கீழ் கூடுதலாக 1.41 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்துறை செயலாளர் திரு ஸ்ரீனிவாஸ் கதிகிதலா தலைமையில் அக்டோபர் 15 அன்று நடைபெற்ற மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தின் போது இம்முடிவு […]
இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு கட்டமைப்பிற்கான அதிகாரபூர்வ சின்ன வடிவமைப்பு போட்டி குறித்த அறிவிப்பு வெளியானது. கட்டடங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளில் டிஜிட்டல் இணைப்புக்கான இந்தியாவின் முதல் மதிப்பீட்டு கட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரபூர்வ சின்னத்திற்கான வடிவமைப்பு போட்டியை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தனிநபர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். இந்த முக்கிய கட்டமைப்பின் அடையாளத்தை வடிவமைப்பதில் விழிப்புணர்வை வளர்ப்பதும் பொதுமக்கள் […]
கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குஜராத் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், இன்று முதல் தனது விசாரணையை நடத்த உள்ளார். கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி வில்லிவாக்கம் தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை […]
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் மக்காச்சோளத்துக்கு உரம் வைப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மாலை வயலுக்குச் சென்றனர். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென மின்னல் பாய்ந்ததில் உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்த கழுதூர் கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, அரியநாச்சி ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ […]
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவு […]

