தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைப்பது வழக்கம். அதன்படி, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி […]

நாடு முழுவதும் 5862 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அதிகரித்துள்ள மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளை எளிதாக்கும் வகையில் நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2026-27 முதல் ஒன்பது ஆண்டு காலத்தில் 57 […]

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலான அரசுத் துறை சார்ந்த வாகனங்களுக்கான பதிவுச் சான்று செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகமான மாசு மற்றும் சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்ட பழைய வாகனங்கள் குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய அரசு பழைய வாகனங்கள் தொடர்பான கொள்கையை கடந்த 2021-ல் வெளியிட்டது. இதன்படி, 10 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் […]

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில்; கூட்ட நெரிசல் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, மின்துறை அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடத்துகின்றனர். டிஜிபி […]

நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற […]

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டுகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கிய விளையாட்டு வீரருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதும், விளையாட்டில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை செய்துவரும் விளையாட்டு வீரருக்கு அர்ஜூனா விருதும், விளையாட்டு மேம்பாட்டிற்கு வாழ்நாள் பங்களிப்பை அளித்தவருக்கு அர்ஜூனா விருதும் (வாழ்நாள்) வழங்கப்படுகிறது. சர்வதேச விளையாட்டுகளில் […]

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் […]

இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் 2024-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி புதுதில்லியில் கையெழுத்தாகியது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தம் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவிடும் வகையில் […]

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,754.50-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் […]

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை பெறப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு […]