எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் 2025- 2026 ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீடு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு ஆகிய இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் சுற்று கலந்தாய்வுக்கு ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை […]

உயிரிழந்த நிர்வாகி ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்ட சம்பவம் ஈரோடு மாவட்ட அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 5-ம் தேதி, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் நாங்களே ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வோம் என அறிவித்திருந்தார். இதையடுத்து அதிமுகவில் செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் […]

திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தீவிர புயல் ‘சக்தி’ நிலவுகிறது. இது இன்று அரபிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி […]

அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரநிலை அறிக்கையை பயன்படுத்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரநிலை அறிக்கை அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர் […]

ஜவுளித் துறைக்கான பிஎல்ஐ திட்டம் புதிய விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 2025, டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையினரின் பெருமளவிலான, உற்சாகமான வரவேற்பைக் கருத்தில் கொண்டு, ஜவுளித் துறைக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்ட விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி விண்ணப்பிப்பதற்கான இணையதளம் 2025, டிசம்பர் 31 வரை திறந்திருக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் முன்மொழிவுகளை https://pli.texmin.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் […]

தேசிய நெடுஞ்சாலைகளில் QR குறியீடு தகவல் பலகைகளை நிறுவ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது . தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கியூ.ஆர். குறியீடு கொண்ட தகவல் பலகைகளை நிறுவவுள்ளது. இந்தப் பலகைகள், நெடுஞ்சாலைப் பயனர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் அவசரகால உதவி எண்களை வழங்கும்.இந்த கியூ.ஆர். குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம், நெடுஞ்சாலையின் எண், நீளம், […]

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான […]

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய 5 தனிப்படை விரைவு. கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருந்து வரும் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு […]

மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், “சென் பார்மா” மருந்து நிறுவனத்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்; மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து கடந்த 1-ம் தேதி கடிதம் வந்தது. மக்களின் உயிர்காக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக, காஞ்சிபுரத்தில் செயல்படும் ‘சென் பார்மா’ நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் […]

தாயுமானவர் திட்டத்தில் 2 நாள் ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் (12.8.2025) தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று […]