பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை, ரூ.11,718.24 கோடி செலவில் 2027-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு உலகின் மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளிவிவரப் பணியாகும். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு – ஏப்ரல் முதல் செப்டம்பர், 2026 வரை நடத்தப்படும். மக்கள் […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என தெரிவித்தார். தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பயனடைந்த மற்றும் சாதனை படைத்த பெண்களின் வெற்றி கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக சென்னையில் `வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ எனும் தலைப்பில் தமிழகத்தின் சாதனை பெண்களின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில், மகளிர் […]

தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும். இன்று காலை திருப்பத்தூர், தருமபுரியில் 17 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும், நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு […]

கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் டிசம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு […]

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சங்க நிர்வாகிகளை வீட்டுக் […]

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறையை திருத்தம் செய்து மேலும் வலுப்படுத்துவதற்கு இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் பயணச் சீட்டு முன்பதிவு முறையை மேம்படுத்த இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐஆர்சிடிசி-யை பயன்படுத்தும் பயனாளர்களின் கணக்குகளை மறு மதிப்பீடு மற்றும் சரிபார்த்தல் மூலம் 2025 ஜனவரி முதல் சந்தேகத்திற்குரிய சுமார் 3.02 கோடி பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. தட்கல் […]

உச்ச நீதிமன்ற வலைத்தளத்தில் நீதிபதிகள் சொத்து விவரங்களைப் பதிவேற்றுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய சட்ட ஆணையத்தின் அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு /செயல்படுத்தலுக்காகவும் விரைவான நடவடிக்கைகளுக்காகவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளுக்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அனுப்புகிறது. இந்த அறிக்கைகளை செயல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டையும் அமைச்சகம் கோருகிறது. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிலுவையில் உள்ள சட்ட ஆணைய அறிக்கைகளின் நிலையைக் காட்டும் அறிக்கையை அமைச்சகம் […]

தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளி கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும்–கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மக்கள் சேவகரும் – “தென் மாவட்டங்களில் சிறந்தகல்வி நன்கொடையாளர்” விருது பெற்றவருமான கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.க.வில் இணைந்த […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், இந்த அவகாசத்தை டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் […]