தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும். இன்று காலை திருப்பத்தூர், தருமபுரியில் 17 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும், நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு […]
கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் டிசம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு […]
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சங்க நிர்வாகிகளை வீட்டுக் […]
வங்கிகளில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10.00 மணிக்கு நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த முகாம், இந்திய நிதி அமைச்சகத்தின் […]
ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறையை திருத்தம் செய்து மேலும் வலுப்படுத்துவதற்கு இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் பயணச் சீட்டு முன்பதிவு முறையை மேம்படுத்த இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐஆர்சிடிசி-யை பயன்படுத்தும் பயனாளர்களின் கணக்குகளை மறு மதிப்பீடு மற்றும் சரிபார்த்தல் மூலம் 2025 ஜனவரி முதல் சந்தேகத்திற்குரிய சுமார் 3.02 கோடி பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. தட்கல் […]
உச்ச நீதிமன்ற வலைத்தளத்தில் நீதிபதிகள் சொத்து விவரங்களைப் பதிவேற்றுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய சட்ட ஆணையத்தின் அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு /செயல்படுத்தலுக்காகவும் விரைவான நடவடிக்கைகளுக்காகவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளுக்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அனுப்புகிறது. இந்த அறிக்கைகளை செயல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டையும் அமைச்சகம் கோருகிறது. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிலுவையில் உள்ள சட்ட ஆணைய அறிக்கைகளின் நிலையைக் காட்டும் அறிக்கையை அமைச்சகம் […]
தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளி கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும்–கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மக்கள் சேவகரும் – “தென் மாவட்டங்களில் சிறந்தகல்வி நன்கொடையாளர்” விருது பெற்றவருமான கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.க.வில் இணைந்த […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், இந்த அவகாசத்தை டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் […]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தில் 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒருகோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கிடும் வகையில் அமைந்திடும்” என அறிவித்தார். முதல் கட்டமாக சுமார் 1,13,75,492 […]
வார இறுதி நாட்களையொட்டி நாளை முதல் 860 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க இதுவரை 19,734 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: பண்டிகை காலம், முகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வார விடுமுறை நாட்களை […]

