விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள 03.11.2017 வரை ஆறு மாத […]

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது. சிங்களப் படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக […]

மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டு அதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் […]

இந்திய ரயில்வேயில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளது. டெக்னீசியன் கிரேட் 3 , டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்), ஆகிய இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னீசியன் கிரேடு மூன்று பிரிவில் 6000 வேலை வாய்ப்புகள் உள்ளன. டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்) பிரிவுக்கு 180 இடங்கள் உள்ளன. மொத்தம் 6180 இடங்கள் காலியிடங்களாக உள்ளன. வயதுவரம்பு 18 வயதில் இருந்து 30 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் […]

சென்னையில் ரூ.489.22 கோடியில் 3,987 சாலைகள் அமைக்கும் பணிகளை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியால் 418.56 கி.மீ. நீளமுடைய 488 பேருந்து தடச் சாலைகள் மற்றும் 5,653.44 கி.மீ. நீளமுடைய 35,978 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 266 கி.மீ. நீளத்துக்கு 375 பேருந்து சாலைகள், 2,170 கி.மீ. நீளத்துக்கு 13,909 உட்புறச் சாலைகள் உள்ளன. […]

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். ஓரணியில் தமிழ்நாடு என்கின்ற தலைப்பின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. […]

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 4-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சில இடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் […]

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலை அந்த பொறுப்பில் இருந்து சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் புதிய பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலைக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அண்ணாமலைக்கு கட்சியில் தேசிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி […]

இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்; மக்களுக்கான திமுக அரசின் திட்டங்களும், சாதனைகளும் 2026-ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன். தமிழகத்துக்கான […]

புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம் வழங்குவது தொடர்பான விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; புதிய விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தம் செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. புதிய திருத்தங்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட 3 மாதங்களில் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும். […]