விண்வெளி வீரர்கள், விண்வெளியில் நடப்பது என இவை அனைத்தும் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம், ஆனால் விண்வெளியில் நாட்களை கழித்தவர்களுக்கு மட்டுமே உண்மையான சிரமம் தெரியும். ஈர்ப்பு விசை வேலை செய்யாத இவ்வளவு உயரத்தில் உயிர்வாழ என்ன தேவை என்பது நாம் அனைவரும் நன்கு அறிவோம். விண்வெளியில், ஈர்ப்பு விசை இல்லாமல், விண்வெளி வீரர்களால் பூமியில் எளிதாகச் செய்யக்கூடிய பல விஷயங்களைச் செய்ய முடியாது. சாப்பிடுவது, தூங்குவது மற்றும் வசதியாக நடப்பதில் […]
இந்தியாவில் பல வரலாற்று கோட்டைகள் உள்ளன, அவற்றில் ஆழமான மர்மங்கள் சூழ்ந்துள்ளன. இங்கு ஆட்சி செய்த மன்னர்கள் தங்கள் ராஜ்யத்தைப் பாதுகாக்க கோட்டைகளைக் கட்டினார்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோட்டைகளும், தனித்துவமான அம்சங்களையும் வரலாற்றுக் கதைகளையும் பெருமைப்படுத்துகின்றன. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருத் என்ற கடற்கரை கிராமத்தில் இதேபோன்ற ஒரு கோட்டை அமைந்துள்ளது, இது முருத் ஜஞ்சிரா கோட்டை என்று அழைக்கப்படுகிறது . கடல் மட்டத்திலிருந்து 90 அடி […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) வரவிருக்கும் சுற்றுப்பயணம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை வழங்கவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் தெரிவித்துள்ளார். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் இந்திய அணி, வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 17 முதல் 31 வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் மிர்பூர் மற்றும் சட்டோகிராமில் நடைபெற உள்ளன. இந்தியா வங்கதேசத்திற்கு பயணம் செய்ய […]
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (28), இவர் நகை திருட்டு தொடர்பாக தனிப்படை போலீசாரால் விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். போலீசார் கண்மூடித் தனமாக தாக்கியதால் அஜித்குமார் உயிரிழந்ததாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அஜித்குமார் உடலைப் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருடைய உடலில் […]
உலக பணக்காரரான எலான் மஸ்க் உள்ளிட்டோரின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க செனட்டில் டிரம்பின் வரி மசோதா நிறைவேறியது. செனட் குடியரசுக்கட்சியினர், அதிபர் டொனால்ட் டிரம்பின் பெரிய வரிவிலக்குகள் மற்றும் செலவுக் குறைப்புத் திட்டத்தை செவ்வாய்க்கிழமை மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றினர். நேற்று இரவு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு கூட்டத்திற்கு பிறகு, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும், தங்களுடைய சொந்த குடியரசுக்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி, அவர்கள் இந்த […]
தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஒவ்வொரு அணியும் தலா 7 லீக் ஆட்டங்களில் விளையாடின. இதையடுத்து லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடம் பெற்ற சேப்பாக்கம், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் குவாலிபயரில் சேப்பாக்கம் – […]
நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்த பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1, 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பரமக்குடி நெடுஞ்சாலைத் திட்டத்தை அமைப்பதற்காக வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை , ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம் , […]
ராணுவ தளபதியை விமர்சித்தது தொடர்பான ஆடியோ லீக்கான நிலையில், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசமைப்பு சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில் தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன்சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவத் தளபதியை ஷினவத்ரா விமர்சித்துள்ளார். இதுதொடர்பான உரையாடல்கள் கசிந்து நாட்டில் சர்ச்சையை […]
ஊசி, மாத்திரையைக் கண்டால் பயப்படாத குழந்தைகளே இருக்க முடியாது. குறும்பு செய்யும் குழந்தைகளிடம், டாக்டரிடம் போய் ஊசி போட்டுவிடுவேன் என்று மிரட்டும் பெரியவர்களும் இருக்கிறார்கள். நம் உடல் நலத்தைப் பாதுகாக்கவே மருத்துவர் ஊசியையும் மாத்திரையையும் அளிக்கிறார் என்பதை அறியும்போது, மருத்துவர்களின் மீது மரியாதை வந்துவிடும். மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். கரோனா போன்ற கொள்ளை நோய் […]
டிஜிட்டல் இணைப்புத் துறையில் இந்தியா இப்போது ஒரு பெரிய படியை எடுக்கப் போகிறது. உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குநரான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க், விரைவில் நாட்டில் தனது சேவைகளைத் தொடங்கக்கூடும். IN-SPACe (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) தலைவர் டாக்டர் பவன் கோயங்கா கூறுகையில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான ஒப்புதல்கள் மற்றும் உரிமச் செயல்முறைகள் முடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். கடைசி சில […]

