நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் ஐ.நா., செயலகம், அதன் ஊழியர்களில் 6,900 பேரை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஐக்கிய நாடுகள் செயலாளர் அலுவலகம் அதன் 3.7 பில்லியன் டாலர் பட்ஜெட்டை 20% குறைத்து, சுமார் 6,900 பணியிடங்களை நீக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் ஜூன் 13ம் தேதிக்குள் இந்த பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகள், பொதுத் தோட்டங்கள், பள்ளிகளுக்கு வெளியே உள்ள பகுதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்கள் போன்ற பரந்த அளவிலான வெளிப்புற இடங்களில் தடை உத்தரவு பொருந்தும். எனினும், கஃபே உள்ளிட்ட இடங்கள் புதிய விதிகளுக்கு […]
மன அழுத்தம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு உட்கொள்ளப்படாதது போன்றவை உங்கள் தலைமுடி நரைப்பதை துரிதப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா ? ஹார்வர்டில் பயிற்சி பெற்ற தோல் மருத்துவரும் தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் நீரா நாதன் கடந்த மே 27 அன்று இன்ஸ்டாகிராமில் 20 மற்றும் 30 களின் முற்பகுதியில் உள்ளவர்களுக்கு முன்கூட்டியே முடி நரைப்பது பல காரணிகளால் ஏற்படக்கூடும் என்று பகிந்துள்ளார். நிபுணர் நாதன் […]
கேரளாவில் கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தென்மேற்கு பருவமழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் முன்னேறி வருவதால், வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பரவலான இடியுடன் கூடிய […]
சுவிஸ் பனிப்பாறையின் பெரிய ராட்சத குவியல் சரிந்து விழுந்ததில் பள்ளத்தாக்கில் இருந்த ஆல்பைன் கிராமம் முழுவதும் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்து, மலைத்தொடராலும் பனி மலைகளாலும் சூழப்பட்டுள்ள நாடாகும். ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான பனிப்பாறைகளுக்கு தாயகமாக இந்த நாடு உள்ளது. பனிப்பாறைகள் சுற்றுச்சூழல் அமைப்புக்கு மட்டுமல்ல, சுவிட்சர்லாந்தில் சுற்றுலாவிற்கும் மையமாகவும் உள்ளன. இங்குள்ள மலை கிராமமான பிளாட்டன், பிர்ச் […]
குழந்தை பிறந்தவுடன் முதல் இரெண்டு நாட்களில் சுரக்கும் தாய்ப்பால். மஞ்சள் நிறத்துடன் காணப்படும். அதிலுள்ள ‘கொலஸ்ட்ரம்’ எனப்படும் பொருள் குழந்தையின் நோயெதிர்ப்புத்தன்மையை பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, கட்டாயமாக இதை குழந்தைக்குப் புகட்ட வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமையாகும். ஆனால், தாய்ப்பால் கொடுப்பதை விடவும், இன்று புட்டிப்பால் கொடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டதை முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் அத்தியாயத்தில் பேசியிருந்தோம். இன்று பல பெயர்களில் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. […]
நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனையே மழைக்காலத்தில் எப்படி துணிகளை காய வைப்பது என்பது தான். அதிலும் குறிப்பாக பெட்ஷீட், போர்வை, டோர்மேட் போன்றவற்றை காய வைப்பது கடினம். ஆனால் இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம், இந்த எளிமையான டிப்ஸ்களை பின்பற்றினாலே எளிதாக உங்கள் துணிகளை காயவைத்து விடலாம். ஒரு பெட்ஷீட் அல்லது போர்வையை மடித்து காய வைக்காமல், ஒரு முனையை ஒரு ஹேங்கரிலும், மற்றொரு முனையை மற்றொரு ஹேங்கரிலும் முடிச்சு […]
பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், இந்திய இராணுவமும் பாகிஸ்தானில் பேரழிவை ஏற்படுத்தியது, அண்டை நாடு அதை பல நூற்றாண்டுகளாக நினைவில் வைத்திருக்கும். முதலில், தனது மக்களை மகிழ்விக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தனது இராணுவம் இந்தியாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்ததாகக் கூறினார், ஆனால் இப்போது ஆபரேஷன் சிந்தூர் காரணமாக தனக்கு நிறைய இழப்புகள் ஏற்பட்டதாக அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தியாவின் சூப்பர்சோனிக் பிரம்மோஸ் மற்றும் […]
கோதுமை மாவை கடைகளில் வாங்கினால் கட்டுப்படியாகாது. காரணம் சுவையும் சற்று வித்தியாசமாக இருக்கும், விலையும் அதிகம். இதனால் பலர் கோதுமையை வாங்கி அதை நன்கு சுத்தம் செய்து, காய வைத்து பிறகு மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வார்கள். பின் தேவைப்படும்போதெல்லாம் அதை பயன்படுத்துவார்கள். பொதுவாக அரைக்கும் வெள்ளை மாவுகளில் கொழுப்பு குறைவாக இருப்பதால் அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். ஆனால் கோதுமை மாவு அப்படி […]
சாபங்கள் பல வகையாக இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது, அதிலும் குறிப்பாக 13 வகையான சாபங்கள் ஒரு மனிதனை பாடாய்படுத்தி எடுக்கும் என்றும் கூறுகிறது. அந்த வகையில் இந்த ஒரு சாபத்தை மட்டும் நாம் வாங்கி கட்டிக் கொள்ளவே கூடாது. இதனால் அடுத்தடுத்த சந்ததியினரையும் இந்த பாவமானது தொடருமாம். இந்த சாபங்கள் நம்மளை வாழ்க்கையில் முன்னேறவே செய்ய விடாதாம். 13 வகையான சாபங்களில் மிகவும் முக்கியமான இந்த சாபம், ‘பெண் சாபம்’ […]