லிப்ஸ்டிக் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களை சாப்பிட்டு வைரலாகிய இன்ஸ்டா பிரபலம் உடல்நிலை பாதிக்கப்பட்ட உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த 24 வயதான இளம்பெண் இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ளார், அதாவது, அழகு சாதனப் பொருட்களை உணவாகப் சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து அப்லோடு செய்து வைரலாகினார். அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை சாப்பிடும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து […]

“பாஜக தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027 வரை தாமதப்படுத்தியுள்ளது, இதன் மூலம் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் திட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக தாமதமாகி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 க்கு முன் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்த பிறகு, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான எம்.கே. ஸ்டாலின், 2026 க்குப் […]

இந்தோனேசியாவின் பண்டா ஆச்சேவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபட்டதற்காக ஒரு இளம் தம்பதியினருக்கு பொது இடத்தில் 100 கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டது, இது பிராந்தியத்தின் கடுமையான ஷரியா சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தண்டனையாகும். மேலும் இஸ்லாமிய சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும் ஒரே இந்தோனேசிய மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த உலகளாவிய கவலைகளை மீண்டும் தூண்டிவிட்டது. மாகாண தலைநகரில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த சவுக்கடி நடந்தது, அங்கு […]

நாம் வாழும் பூமி, நமக்கான ஒரே ஒரு பூமி அதன் அழிவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கையில் நாம் அதை சுரண்டி பிழைப்பதற்காக வேகமாக ஓடி கொண்டிருக்கிறோம். மேல் சொன்ன காற்று, சூரிய ஒளி எல்லாம் நீங்கள் அதை கவனித்து எத்தனை நாட்கள் ஆகின்றது என்பதற்கான கேள்வி மட்டுமே. இப்போது நீங்கள் இவற்றை கவனித்தால் இது எதிலும் தூய்மையை காண முடியாது. சுற்றமான காற்றும், தூசு படராத ஒளியும் […]

வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்து முடித்துவிட்டு, விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி, பூஜை செய்து வணங்க வேண்டும். விஷ்ணு பகவானை வணங்கிய பின் மஞ்சள் நிற பொருட்களை மற்றவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். வியாழக் கிழமைகளில் குருவை வணங்கி விரதம் இருந்து, சிவபெருமானுக்கு மஞ்சள் லட்டு செய்து, படைத்து வணங்க வேண்டும். சிவபெருமானை தரிசித்து முடிந்ததும், வாழை மரத்திற்கு மஞ்சள் நிறமுள்ள இனிப்பு பலகாரங்களை வைத்து படைத்து […]

18 ஆண்டுகளில் முதல்முறையாக பெங்களூரு அணியினர் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற ஆர்சிபி அணி வீரர்களை வாழ்த்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை காண ஆயிரக்கணக்கில் கட்டுக்கடாங்காமல் ரசிகர்கள் கூடியதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஐபிஎல் தொடங்கி 18 சீசன்கள் முடிந்துவிட்டன. முதல் சீசனிலிருந்தே கோப்பைக்காக போராடி வந்த […]

நமது கைகளிலும் சரி, கால்களிலும் சரி ஆபரணம் அணிவதற்கு என்றே சில வரைமுறைகள் நம் பெரியோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இதற்கு பின்னால் சில அறிவியல் காரணங்களும் உள்ளன. கை, கால் இரண்டிலும் உள்ள இரண்டாவது விரலில் தான் ஆபரணம் அணிய வேண்டும் என சொல்லி உள்ளார்கள். கையில் மோதிரம் அணிவதாக இருந்தாலும், காலில் மெட்டி அணிவதாக இருந்தாலும் இரண்டாவது விரலை தான் சொல்லி உள்ளார்கள். உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் […]

பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது. பருத்தி ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம் இயற்கை நம் உடலுக்கு பரிசாகத் தந்தது பருத்தி. பருத்தி ஆடைகளில் பல உடைகள் வந்திருந்தாலும் பாரம்பரியம் என்றால் புடவைகள்தான். கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான். கோடைக்காலத்தில், காட்டன் புடவைகளானது கட்டுவதற்கு மட்டுமில்லை, உடல் அளவிலும் நமக்கு பல […]

சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது, ஆனால் அதற்காக ஆசைப்படவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார் கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஷாக் டார், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய துருக்கி, ஈரான், அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான் பயணத்தின் விவரங்களை ஊடகங்களுக்கு வழங்கவும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான மோதலில் அந்தந்த நாடுகளின் தலைமைகள் அளித்த ஆதரவிற்கு […]

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லவே அவதிப்படுகின்றனர். காலை வேளையில் 10 மணி நெருங்கும்போதே வெயிலால் அனத்தல், வியர்த்து ஒழுகுதல் என தொடங்கி விடுகிறது. வெளியே சென்றால்தான் தொல்லை என்று சிலர் வீடுகளிலேயே இருந்தாலும் கூட வெயிலினால் வீடே அனல் பறக்கிறது. மின்விசிறியை போட்டால் கூட அனல்காற்றுதான் வீசுகிறது என பலரும் புலம்புகின்றனர். ஏசி இல்லாத வீடுகளில் வெயிலின் தாக்கத்தை எப்படி […]