உருளைக்கிழங்கின் வேர்கள் தக்காளி மற்றும் எட்டுபெரோசம் என்ற காட்டு தாவரத்துடன் தொடர்புடையவை என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். உருளைக்கிழங்கு சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவற்றின் கலப்பினத்திலிருந்து உருவாக்கப்பட்டது. இது தக்காளியிலிருந்து SP6A மரபணுவையும், எட்டுபெரோசம் இலிருந்து IT1 மரபணுவையும் பெற்றது. நாம் அனைவரும் அடிக்கடி உருளைக்கிழங்கையும் தக்காளியையும் ஒன்றாகச் சாப்பிடுகிறோம். சில சமயங்களில் சாட்டிலும், சில சமயங்களில் பரோட்டாக்களிலும் சாஸ்களிலும் சாப்பிடுகிறோம். ஆனால் உருளைக்கிழங்கிற்கும் தக்காளிக்கும் இடையிலான உறவு […]
துக்க நிகழ்ச்சி நடைபெற்ற வீடுகளில் நாம் இதனை பார்த்திருப்போம். இறந்தவரின் கால் கட்டை விரல்களை கட்டுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், ஏன் கால் கட்டை விரல்களை கட்ட வேண்டும்? மரணம் நிகழ்ந்த பிறகு கூட பிராணசக்தி உடலை விட்டு முழுவதும் அகன்று விடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றி, ஓர் உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. எனவே, தான் இறந்து போனவர்களின் உடல் வடக்கு தெற்காக வைக்கப்படுகின்றன. உடல் […]
உலகில் உயரமான விநாயகர் சிலை எங்கு உள்ளது தெரியுமா? இந்தியாவில் இல்லை! விநாயகருக்கென எண்ணற்ற கோவில்களும் சிலைகளும் உள்ள தாயகம் இந்தியாவே என்றாலும், அந்த மிக உயரமான விநாயகர் சிலை இந்தியாவில் இல்லை. 39 மீட்டர் உயரமுள்ள விநாயகர் சிலை தாய்லாந்தின் சச்சோஎங்சாவ் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது இன்று ஒரு முக்கிய யாத்திரைத் தலம் மற்றும் சுற்றுலா தலமாக வளர்ந்துள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவராகவும், ஞானத்தின் கடவுளாகவும் வழிபடப்படுகிறார். தென்கிழக்காசியாவில் […]
கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி இஸ்ரோ நிலவிற்கு சந்திரயான் 3 என்ற விண்கலத்தை அனுப்பியது. 40 நாட்கள் அது விண்வெளியில் பயணித்து, சரியாக ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் பத்திரமாக தரையிறங்கி உலக சாதனையை படைத்தது. இதனால், உலக நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் மென்மையான தரையிறக்கத்தை நிறைவு செய்த 4-வது நாடு என்ற வரலாற்று […]
கணவன் வேலை இன்றி இருக்கும் நிலையிலும், பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு கொண்டிருக்கும் காலத்திலும், அவரை இழிவுபடுத்துவது அல்லது நியாயமற்ற கோரிக்கைகளை வற்புறுத்துவது மனரீதியான கொடுமைக்கு சமம் என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதி ரஜனி துபே மற்றும் நீதிபதி அமிதேந்திர கிஷோர் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு ஆணுக்கு விவாகரத்து வழங்கும்போது இந்தக் கருத்தை வெளியிட்டது. அதாவது COVID-19 தொற்றுநோய் காலத்தில் வேலை இன்றி இருந்த கணவனை […]
நீங்கள் இரவில் படுக்கையில் அலைமோதிக் கொண்டு சரியான நித்திரை பெறாமல் இருந்தால், இந்தக் கடுமையான பிரச்சினையை கவனத்தில் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிபுணர்களின் கூற்றுப்படி, தூக்கமின்மை அல்லது ஒழுங்கற்ற உறக்கம் நீண்ட காலத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக அமையக்கூடும். பகலில் சோர்வாகவும் தூக்க கலக்கத்துடனும் உணரச் செய்வதோடு மட்டுமல்லாமல், தூக்கமின்மை உங்கள் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதோடு, உடல் எடை அதிகரிக்கும் அபாயத்தையும் உருவாக்குகிறது. ஆனால், […]
இஸ்ரேலில் 2 மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டதாக ஆங்கில ஆசிரியை ஒருவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டின் பெத்தாக் டிக்வா பகுதியில் பணியாற்றிய 43 வயதான ஒரு ஆங்கில ஆசிரியர், தனது பள்ளியில் படிக்கும் 17 வயதான இரு மாணவர்களுடன் மூவருடனான பாலியல் உறவில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டதால், சிவில் சர்வீஸ் கமிஷன் அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளது. அந்த ஆசிரியையின் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை. பல மாதங்கள் நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கை […]
பொதுவாக நாம் எல்லோரும் கோவிலுக்குப் போகின்ற பொழுது, முதலில் வாங்குவது அர்ச்சனைப் பொருள்கள் தான். குறிப்பாக, பூ, கற்பூரம், தேங்காய், பழங்கள் தான். அதில் தேங்காயைத் தவிர மற்ற எல்லா பொருள்களையும் மேலிருந்தே பார்த்து நல்லதா வாங்கி விட முடியும். ஆனால் தேங்காயை மட்டும் அப்படி பார்த்து வாங்க முடியாது. தேங்காய் உள்ளுக்குள் எப்படி வேண்டுமானாலும் இருக்கும். நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தால், முற்றிய தேங்காயா இல்லை இளம் தேங்காயா […]
இந்திய மற்றும் சீன நாட்டின் இடையிலான எல்லைப் பிரச்னை மற்றும் இருநாட்டு ராணுவத்தின் தாக்குதல் காரணமாக சுமார் 250-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடைசெய்யப்பட்டன. அதில் ஒன்று டிக்டாக். தனி மனிதன் சுதந்திரத்தின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் களமாக டிக் டாக் செயலி உலக அளவில் உலா வந்தது. குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது என்றால் மிகையில்லை. அதாவது, சின்னச் சின்ன வீடியோக்களை பதிவு செய்யும் டிக் டாக் […]
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுத் துறையில், குறிப்பாக உண்மையான பணத்தை உள்ளடக்கிய விளையாட்டுகள் (Real Money Games) ஏற்படுத்தும் சமூகப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ‘ஆன்லைன் விளையாட்டுகளை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா, 2025’ எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21, 2025) நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் சட்டம், குடியரசுத் […]

