வட அமெரிக்காவின் கொலம்பியாவில் விமான சக்கரத்தில் அமர்ந்து பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். கொலம்பியாவில் பொகோட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு  சிலி நாட்டின் ஏவியன்கா விமானம் ஒன்று வந்து தரை இறங்கியது. விமானம் நின்றவுடன் பயணிகள் ஒவ்வொருவராக கீழே இறங்கி கொண்டு இருந்தனர். பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் விமான ஊழியர்கள் விமானத்தில் வழக்கமான பராமரிப்பு பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் […]

நாட்டிலேயே புலிகள் அதிகமாக உள்ள மாநிலமான மத்தியபிரதேசத்தில் 34 புலிகள் இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் உள்ள புலிகளை கணக்கெடுத்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மத்தியபிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகாவில் 524 புலிகளும் இருந்துள்ளன. இதனால் புலிகள் மாநிலம் என்ற சிறப்பை மத்தியபிரதேசத்திற்கு கிடைத்தது. […]

உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பல்வேறு நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் திறன் கொண்ட சிறந்த மருந்து அஸ்வகந்தா. பாரம்பரிய இந்திய ஆயுர்வேத மருந்தாய் பல காலங்களாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது உடலின் வலியையும் வீக்கத்தையும் குறைக்க உதவும். பல ஆயுர்வேத நிபுணர்களின் கருத்துக்களில் அஷ்வகந்தா வேர்கள் சிறந்த தூக்கம் பெறுவதற்கு ஏற்றது என குறிப்பிடப்படுகிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. நினைவுக் குறைவை நீக்கவும் நினைவை மேம்படுத்தவும் அஷ்வகந்தா உதவுகிறது. மூளையின் […]

2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும், சபாநாயகர் அப்பாவு உரையை தமிழில் படிக்கவிருக்கிறார். இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் மதியம் அலுவல் ஆய்வு குழு கூட்டம் […]

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்பாப்பே அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நியூயார்க்கில் தனது விடுமுறையை கொண்டாடிவரும் பிரெஞ்சு தேசிய அணியின் கேப்டன் எம்பாப்பே, உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு Ligue 1 தொடரில் PSG அணியுடன் லென்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடினார். அதன் பிறகு விடுமுறையில் உள்ள எம்பாப்பே தனது சக வீரர் அக்ரஃப் ஹக்கிமியுடன் நியூயார்க் சென்றிருக்கிறார். […]

கலாச்சாரம் மிகவும் பிடித்துப்போனதால் பிலிப்பைன்ஸ் நாட்டு இளம் பெண் ஒருவர் தமிழ்நாட்டு இளைஞரை திருமணம் செய்துள்ள சம்பவம் நாகர் கோவிலில் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தேசமணிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெமி ரென்ஸ்விக்கிற்கும் – பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த லாலைனிக்கும், கடல் கடந்தது காதல் ஏற்பட்டது. இறுதியில் அவர்கள் இருவீட்டரின் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் புதுமண தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி […]

சானியா மிர்சா : கவர்ச்சியான உடலமைப்பு கொண்ட பெண் டென்னிஸ் வீரர்களில் அவர் 5வது இடத்தைப் பிடித்தார். 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார். சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், […]

கேரளாவில் உணவகம் ஒன்றில் ஷவர்மா உணவு வாங்கி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டத்தைச் சேர்ந்த பிபின் என்பவர், கடந்த புத்தாண்டு தினத்தன்று மதியம் அப்பகுதியில் உள்ள கேமல் ரெஸ்டோ நிறுவனத்திடமிருந்து மூன்று ஷவர்மாக்களை ஆர்டர் செய்துள்ளார். இதனை அந்த வீட்டில் இருந்த ஏழு வயது குழந்தை […]

பிரபல எல்.ஜி பெருங்காய நிறுவனத்தின் பெயரில் போலி பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்து வந்தவர்களை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் முன்னணி பெருங்காய நிறுவனங்களுள் ஒன்று எல்ஜி பெருங்காயம் தயாரிப்பு நிறுவனம். இந்த நிலையில் சில நபர்கள் எல்ஜி பெருங்காயத்தின் பெயரிலேயே போலி பெருங்காயத்தூள் தயாரித்து, அதேபோன்று பிளாஸ்டிக் டப்பாக்களில் லேபில்கள் ஒட்டி அடைத்து, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இதனால் பல ஊர்களில் இருந்தும் பெருங்காயம் […]