நீண்ட ஆயுள், அகால மரணம் என இரண்டுக்குமே காரணமானவர் சனிபகவான் தான். சனி பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி பெற்றோ, உச்சம் பெற்றோ இருந்தால் அவர் அனைத்து விதமான செளபாக்கியங்களையும் பெற்று, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார். “சனி கொடுத்தால் எவர் தடுப்பார்?” என சொல்வார்கள். அது போல சனி பகவான் எந்த அளவிற்கு துன்பத்தை கொடுக்கக் கூடியவரோ, அதே அளவிற்கு நற்பலன்களையும் வாரி வழங்கக் கூடியவர். வாழ்க்கையில் தாங்க […]
பர்ஸில் வைத்திருக்கும் பணம் மென்மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நாம் எண்ணுவோம். அதற்கு இயற்கையான முறையில் வாசனை தரக்கூடிய கிராம்பு, ஏலக்காய், ஜவ்வாது, பச்சை கற்பூரம் ஆகியவற்றில் ஏதேனும் வைக்கும்போது அது பணத்தை நமக்கு ஈர்த்துத் தரும் என்று சொல்லப்படுகிறது. பர்ஸில் அதிகமாகக் கடன் ரிசிப்ட் வைத்திருக்கிறீர்கள் என்றால், அது மேலும் கடன் அதிகமாக வாங்கும் சூழலை அதிகரிக்கும். நீங்கள் பணம் வைத்திருக்கும் பர்ஸில் மெடிக்கல் பிரிஸ்கிரிப்ஷனை வைத்திருக்காதீர்கள். நோய் […]
உயிருள்ள நண்டுகளைப் படையல் வைத்து சிவனை வணங்குவதால் அவர்களின் குறைகள் நீங்குவதாகவும் மேலும் காது சம்பந்தமான பிரச்னைகள் நீங்கி, உடல் நலம் பெற உதவுவதாக கூறப்படுகிறது. குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள ராம்நாத் சிவா கேலக் கோயிலில் உள்ள சிவனுக்கு உயிருள்ள நண்டுகளைப் படைத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். குஜராத் மாநிலம், சூரத்தில் உம்ரா என்ற இடத்தில் புகழ் பெற்ற ராம்நாத் சிவா கெலா கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் […]
பலூசிஸ்தானின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியதாக பலூச் விடுதலைப் படை கூறியுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சுராப் நகரை பலூச் போராளிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சூராப் நகரத்தில் உள்ள காவல் நிலையத்தை சேதப்படுத்தி, பின்னர் தீ வைத்து எரித்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்புக்கு BLA பொறுப்பேற்றுள்ளது இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பலூச் போராளிகள், சூரப் நகரத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் […]
பிறர் கொட்டாவி விடுவதைப் பார்த்தும் நமக்கும் அடிக்கடி கொட்டாவி வரும். இது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் நடக்கும். இது குறித்தும் அறிஞர்கள் ஆய்வு நடத்தி ஆச்சரியமான முடிவுகளை பெற்றிருக்கின்றனர். பிறர் கொட்டாவி விடுவதை பார்த்ததும் கொட்டாவி வருவது என்பது குடும்ப உறுப்பினர்களிடையே தான் அதிகமாக இருக்கிறதாம். குடும்ப உறுப்பினர் கொட்டாவி விடுவதை பார்த்தும் கொட்டாவி வரும் எண்ணிக்கை அதிகம் என்றும், அதுவே அந்நியர்கள் என்றால் இந்த எண்ணிக்கை குறைவு தான் […]
தென்மேற்கு பருவமழை இயல்பை விட இந்த ஆண்டு சற்று முன்னதாகவே தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இந்தநிலையில், இயற்கைப் […]
உலகின் பிற நாடுகளுடனும் இந்தியா ஒற்றுமையை அதிகரிக்க விரும்புவதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டாண்மைகளை உருவாக்குவதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். குஜராத்தின் வதோதராவில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (மே 30, 2025) வெளிநாட்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அவர், சர்வதேச ஒத்துழைப்பு, தன்னிறைவு இந்தியா மற்றும் வசுதைவ குடும்பகரம் ஆகியவற்றின் […]
ஸ்மார்ட்போன்கள் என்பது தற்போது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. செல்போன் அழைப்புகளுக்கு மடும் இன்றி வங்கி பரிவர்த்தனைகள், ஷாப்பிங், பொழுது போக்கு விஷயங்கள் என அனைத்தையும் உள்ளங்கைக்குள் ஸ்மார்ட்போன்கள் கொண்டு வந்துவிட்டன. செல்போன் புதிதாக வாங்கியவர்கள் உடனடியாக ஸ்கீரின் கார்டு அல்லது டெம்பர் கிளாஸ் பயன்படுத்துவதை பார்க்க முடியும். ஸ்மார்ட் போன்கள் கீழே விழுந்தால் டிஸ்பிளே பாதிக்கப்படாமல் இருக்கவும், டிஸ்பிளேவில் கீறல் போன்றவை ஏற்படாமல் இருக்கவும் இந்த ஸ்கீரின் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் […]
ஜூன் மாதம் சாதாரண குடிமக்களுக்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் ஜூன் 1 முதல் எல்பிஜி எரிவாயு விலைகள் முதல் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் வரை சில முக்கியமான மற்றும் பெரிய மாற்றங்கள் இருக்கலாம். எனவே நாளை (ஜூன் 1) முதல் என்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை இனி பார்க்கலாம். நாளை முதல் கேஸ் சிலிண்டர், ரேஷன் கார்ட், ஆதார் அட்டை, கிரெடிட் கார்ட், ஏடிஎம் மூலம் பிஎப் […]
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், குழந்தைப் பருவம் என்பது விளையாடி மகிழ்ந்து, இயற்கையோடு ஒன்றிணைந்து வளர வேண்டிய பருவம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். செல்போன் போன்ற சாதனங்கள் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, குழந்தைகளின் உலகமாக மாறிவிடக் கூடாது. சரியான வழிகாட்டுதலுடன், கட்டுப்பாட்டுடன் குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. குழந்தைகள் சிறு வயதிலேயே மின்னணு திரைகளுக்கு அறிமுகம் ஆகும்போது, அவர்கள் அதற்கு அடிமையாகிவிடும் அபாயம் உள்ளது. […]

