வாகனம் இல்லாத வீடு இல்லை. டயர் இல்லாத வண்டியில்லை. வாகனத்திற்கும், சாலைக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் ஒரே பாகம் டயர்கள்தான். டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பதற்கான காரணங்களை காண்போம். கடந்த 1895ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் டயர் வெள்ளை நிறத்தில்தான் இருந்தது. ஏனெனில் தூய்மையான ரப்பரால் இது உருவாக்கப்பட்டது. பால் போன்ற வெள்ளை நிறம்தான் (Milky White) ரப்பரின் இயற்கையான வண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிற டயர்கள் நீண்ட […]
வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது, புற்றுநோய்களின் பாதிப்பு ஒரு லட்சம் பேரில் 173 முதல் 280 வழக்குகள் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் புவி வெப்பமடைதல் பெண்களுக்கு புற்றுநோயை மிகவும் பொதுவானதாகவும் ஆபத்தானதாகவும் மாற்றக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதி உலகின் பிற பகுதிகளை விட மூன்று தசாப்தங்களுக்கு முன்பே மூன்று முதல் நான்கு […]
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் சிட்டியிலிருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தப்கேஷ்வர் மகாதேவ் கோவில். தன்சு ஆற்றின் (Tons river) கரையில் அமைந்துள்ள இக்கோவில் இயற்கையான குகையில் கட்டப்பட்ட கோவிலாகும். இது தப்கேஷ்வர் கோயிலை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாகும். கம்பீரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது, இந்த புனித இடத்திற்கு அழகு சேர்க்கிறது என்றால் மிகையாகாது. கோவிலுக்கு செல்வதற்கு காடு வழியாக சிறிது தூரம் நடக்க வேண்டும். […]
நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் ஐ.நா., செயலகம், அதன் ஊழியர்களில் 6,900 பேரை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஐக்கிய நாடுகள் செயலாளர் அலுவலகம் அதன் 3.7 பில்லியன் டாலர் பட்ஜெட்டை 20% குறைத்து, சுமார் 6,900 பணியிடங்களை நீக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் ஜூன் 13ம் தேதிக்குள் இந்த பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகள், பொதுத் தோட்டங்கள், பள்ளிகளுக்கு வெளியே உள்ள பகுதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்கள் போன்ற பரந்த அளவிலான வெளிப்புற இடங்களில் தடை உத்தரவு பொருந்தும். எனினும், கஃபே உள்ளிட்ட இடங்கள் புதிய விதிகளுக்கு […]
மன அழுத்தம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு உட்கொள்ளப்படாதது போன்றவை உங்கள் தலைமுடி நரைப்பதை துரிதப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா ? ஹார்வர்டில் பயிற்சி பெற்ற தோல் மருத்துவரும் தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் நீரா நாதன் கடந்த மே 27 அன்று இன்ஸ்டாகிராமில் 20 மற்றும் 30 களின் முற்பகுதியில் உள்ளவர்களுக்கு முன்கூட்டியே முடி நரைப்பது பல காரணிகளால் ஏற்படக்கூடும் என்று பகிந்துள்ளார். நிபுணர் நாதன் […]
கேரளாவில் கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தென்மேற்கு பருவமழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் முன்னேறி வருவதால், வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பரவலான இடியுடன் கூடிய […]
சுவிஸ் பனிப்பாறையின் பெரிய ராட்சத குவியல் சரிந்து விழுந்ததில் பள்ளத்தாக்கில் இருந்த ஆல்பைன் கிராமம் முழுவதும் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்து, மலைத்தொடராலும் பனி மலைகளாலும் சூழப்பட்டுள்ள நாடாகும். ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான பனிப்பாறைகளுக்கு தாயகமாக இந்த நாடு உள்ளது. பனிப்பாறைகள் சுற்றுச்சூழல் அமைப்புக்கு மட்டுமல்ல, சுவிட்சர்லாந்தில் சுற்றுலாவிற்கும் மையமாகவும் உள்ளன. இங்குள்ள மலை கிராமமான பிளாட்டன், பிர்ச் […]
குழந்தை பிறந்தவுடன் முதல் இரெண்டு நாட்களில் சுரக்கும் தாய்ப்பால். மஞ்சள் நிறத்துடன் காணப்படும். அதிலுள்ள ‘கொலஸ்ட்ரம்’ எனப்படும் பொருள் குழந்தையின் நோயெதிர்ப்புத்தன்மையை பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, கட்டாயமாக இதை குழந்தைக்குப் புகட்ட வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமையாகும். ஆனால், தாய்ப்பால் கொடுப்பதை விடவும், இன்று புட்டிப்பால் கொடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டதை முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் அத்தியாயத்தில் பேசியிருந்தோம். இன்று பல பெயர்களில் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. […]
நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனையே மழைக்காலத்தில் எப்படி துணிகளை காய வைப்பது என்பது தான். அதிலும் குறிப்பாக பெட்ஷீட், போர்வை, டோர்மேட் போன்றவற்றை காய வைப்பது கடினம். ஆனால் இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம், இந்த எளிமையான டிப்ஸ்களை பின்பற்றினாலே எளிதாக உங்கள் துணிகளை காயவைத்து விடலாம். ஒரு பெட்ஷீட் அல்லது போர்வையை மடித்து காய வைக்காமல், ஒரு முனையை ஒரு ஹேங்கரிலும், மற்றொரு முனையை மற்றொரு ஹேங்கரிலும் முடிச்சு […]

