சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக […]
வங்கிகளில் லாக்கர் வைத்துள்ள வாடிக்கையாளார்கள் அந்த ஒப்பந்தங்களை 2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் பொதுவாக தனது வாடிக்கையாளர்களின் நகைகள், எஃப்டி பேப்பர்கள் போன்ற சொத்துக்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துகொள்ள லாக்கர்களை வழங்குகிறது. அடிக்கடி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக பல விதிகளை வெளியிட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது லாக்கருக்கான சில விதிகளையும் வெளியிட்டுள்ளது அதில் வங்கிகள் வாடிக்கையாளருக்கு லாக்கரை […]
பிலிப்பைன்ஸில் நேற்று பெய்த கனமழை வெள்ளத்தில் சுமார் 46,000 பேர் சிக்கித்தவித்தனர். காலநிலை மாற்றம் காரணமாகவே உலகம் முழுவதும் கடும் வறட்சி, காலம் தவறிய மழை, அதி கனமழை, வெள்ளம் ஆகியன ஏற்படுகின்றன. அதற்கு பிலிப்பைன்ஸும் விதிவிலக்கல்ல. பிலிப்பைன்ஸில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழையால், பிலிப்பைன்ஸின் மிண்டானோ தெற்குப் பகுதிகள், ஓசாமிஸ், கிளாரின், உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் மார்பளவுக்கு மேல் செல்லும் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. வெள்ள […]
அஸ்வின் ஒரு விஞ்ஞானி என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ட்வீட் செய்திருப்பது இணையத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அஸ்வின் – ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி. இந்த சூழலில் அஸ்வினை ‘விஞ்ஞானி’ என சொல்லி ட்வீட் செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக். வங்காளதேசத்துக்கு எதிரான […]
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற இப்படம் தமிழில் அதே பெயரில் ரீமேக்காகிறது. இப்படத்தை […]
உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ் நாளில் 150,000 மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 5 முறை உலகம் முழுதும் சுற்றுவதற்கு சமம். இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை வறண்ட பாதங்கள் மற்றும் பாத எரிச்சல் வலி ஆகியவை. ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய்க்காக […]
இளைஞர் ஒருவர் 10 ரூபாய் கொடுத்தால் கடும் குளிரில் ஆற்றில் புனித நீராடுவதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டிவரும் நிலையில் இந்நிலையில் அங்குள்ள புனித தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், கடும் குளிர் காரணமாக புனித நீராட முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். இதனை கவனித்த இளைஞர் ஒருவர், உங்களுக்கு பதிலாக உறைய வைக்கும் குளிரில் நதியில் நீராடுகிறேன் என்றும், அதற்கு கட்டணமாக 10 ரூபாய் தந்தால் […]
அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் பகுதியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய சீன ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். இதனிடையே, ரவுடிகளை போல கையில் உருட்டுக்கட்டை, ஹாக்கி ஸ்டிக், கிரிக்கெட் மட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்த சீனப் படையினரை, இந்திய ராணுவ வீரர்கள் வெறும் கைகளை கொண்டே அடித்து விரட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய வீரர்களிடம் ஏற்கனவே ஒரு முறை கல்வான் பள்ளத்தாக்கில் ‘குட்டு’ வாங்கி ஓடிய சீன வீரர்கள், […]
ஐபிஎல் 16-வது சீசனுக்கான மினி ஐபிஎல் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் சாம் கரனை ரூ.18.5 கோடிக்கு எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வீரர் என்ற சாதனையையும் சாம் கரன் படைத்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் சாம் கரன் ஐபிஎல் ஏல சாதனையை முறியடித்த பிறகு, அவரது காதலியுடனான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். […]
புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்னைகளால் 2100 ஆம் ஆண்டிற்குள் 97 % பென்குயின்கள் உள்ளிட்ட அரிய உயிரினங்கள் அழிந்துவிடும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அண்டார்டிகா கண்டம் அரிய வகை உயிரினங்களுக்கு மிகவும் பாதுகாப்பான வசிப்பிடமாக இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்கள் பல பிரச்னைகளை சந்தித்தும், அழிவை நோக்கி நகர்ந்தும் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலை கழகம் நடத்திய ஆய்வில், பெரிய அளவிலான […]