ஓஹோ…சீன ராணுவத்தினர் அடிக்கடி எல்லைக்குள் ஊடுருவ இது தான் காரணமா?

அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் பகுதியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய சீன ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். இதனிடையே, ரவுடிகளை போல கையில் உருட்டுக்கட்டை, ஹாக்கி ஸ்டிக், கிரிக்கெட் மட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்த சீனப் படையினரை, இந்திய ராணுவ வீரர்கள் வெறும் கைகளை கொண்டே அடித்து விரட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய வீரர்களிடம் ஏற்கனவே ஒரு முறை கல்வான் பள்ளத்தாக்கில் ‘குட்டு’ வாங்கி ஓடிய சீன வீரர்கள், தற்போது மீண்டும் அருணாச்சலப் பிரதேசத்திலும் அடிவாங்கியதால் மிகுந்த அவமானம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்தோ பசுபிக் தகவல் தொடர்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், இமாலய தங்கம் என அழைக்கப்படும் மருத்துவ குணம் நிறைந்த கார்டிசெப்ஸ் நம் நாட்டின் எல்லைப்பகுதிகளில் அதிகமாக இருப்பது காரணம் என தெரிவித்துள்ளது.

கார்டிசெப்ஸ் என்பது என்ன? அதற்கு இவ்வளவு மவுசா?

கம்பளிப்பூச்சி போன்று காணப்படும் ஒருவகை பூஞ்சை காளான் தான் இந்த கார்டிசெப்ஸ், இந்தியாவின் இமயமலை ஒட்டிய பகுதியிலும், தென்மேற்கு சீனாவில் உள்ள உயரமான கிங்காய் – திபெத் பகுதியில் அதிகளவில் கிடைக்க கூடிய பூஞ்சை வகை காளான். இதனுடைய சர்வதேச சந்தை மதிப்பு கார்டிசெப்ஸ் பூஞ்சையின் சந்தை மதிப்பு கிலோ ஒன்றிற்கு லட்சகணக்கில் என கூறப்படுகிறது. இந்த வகை காளானை சீனா அதிகளவில் சேகரித்து , ஏற்றுமதி செய்து வருகிறது. சீனாவில் தங்கத்தை விட விலை அதிகம் என்று கூறப்படும் பூஞ்சையை தேடித் தான் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அத்து மீறி நுழைய முயல்வதாக கூறப்படுகிறது. கார்டிசெப்ஸ் பூஞ்சை சிறுநீரகக் கோளாறு முதல் ஆண்மை குறைவு வரை  குணப்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த காளானை அதனுடைய வீரியம் குறையாமல் ஆய்வகச் சூழலில் வளர்க்க விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

Kokila

Next Post

"காதலித்து திருமணம் செய்தும் பிரித்துவிட்டனர்" இளைஞரின் உருக்கமான கடிதம்..,

Sun Dec 25 , 2022
தருமபுரி அருகே உள்ள பழைய தருமபுரி சின்னத்தோப்பு பகுதியை சேர்ந்த வேலு மகன் சத்ரியன்(25) என்பவர் சம்பா கடையில் வேலை செய்து வந்தார். 17 வயதுடைய பெண்ணை காதலித்து வந்த சத்ரியன் கடந்த மே மாதம் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து பெண்ணின் தாயார்,தனது மகளை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர், சத்ரியனை போஸ்கோ சட்டத்தின் கீழ் […]
’ஞாயிற்றுக்கிழமை உங்க விருப்பம்தான்’..!! ஏமாற்றி திருமணம் செய்த நபருக்கு இப்படி ஒரு தீர்ப்பா..?

You May Like