சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகிப் பரவி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அனகொண்டா என்பது உலகின் மிகப்பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. குறிப்பாக அமேசான் காடுகள் தான் இவை வாழும் முக்கிய இடமாக விளங்குகின்றன. சமீபத்தில், அமேசான் நதியில் பல ராட்சத அனகொண்டா பாம்புகள் நீந்தும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மிக உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கும்போது […]
தபால் நிலையத்தில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. தொடர் வைப்புத் திட்டமும் இதில் ஒன்று. இதில் சேர்ந்தால் ஒரே நேரத்தில் பெரிய தொகையை உங்களால் பெற முடியும். மாறிவரும் தேவைகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப சேமிக்கும் பழக்கம் மக்களிடையெ அதிகரித்து வருகிறது. அதற்காக நல்ல வருமானத்தை ஈட்டுவதற்கான வழிகளை அவர்கள் தேடுகிறார்கள். அத்தகையவர்களுக்கு அஞ்சல் அலுவலகம் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. தபால் நிலையத்தில் கிடைக்கும் அத்தகைய சிறந்த […]
சார் – பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு நடப்பதை உறுதி செய்ய, சார் – பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவுத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக பதிவு செய்யப்படுவது தெரிந்த விஷயம்தான். இந்த பத்திரங்கள், பதிவு செய்யப்பட்ட சில நாட்களுக்குள்ளே உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை பதிவுத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பல அலுவலகங்களில் பொதுமக்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய […]
உடல் ஆரோக்கியமாக இருக்க, ஜிம்முக்கு செல்ல வேண்டும் என அவசியமில்லை. ஆம், தினமும் 20 நிமிடங்கள் நடப்பதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இதனால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தினமும் உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இப்போதெல்லாம், பலர் உட்கார்ந்தே வேலை செய்யப் பழகிவிட்டனர். உடல் செயல்பாடு குறைந்துவிட்டது. உடல் ஆரோக்கியமாக இருக்க போதுமான உடல் செயல்பாடு அவசியம். அதனால்தான் மருத்துவர்கள் தினமும் […]
வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமான நடிகை அனிதா ஹசானந்தனியின் லேட்டஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. 2002ஆம் ஆண்டு வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தை ரவி சங்கர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகன், மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அனிதா ஹசானந்தனி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவருடன் குணால், நம்பியார், மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் […]
குஜராத்தின் காந்திநகரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 1947 இல் காஷ்மீர் மீதான தாக்குதலைக் குறிப்பிட்டார். அந்த தாக்குதலை பற்றி இப்போது பார்க்கலாம். பிரதமர் மோடி தற்போது குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார், குஜராத்தில் உள்ள காந்திநகரில் இரண்டு கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ மேற்கொண்டார். நேற்று காந்திநகரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர், 1947 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலைப் பற்றி குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , […]
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஞான சேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆன்லைன் வாயிலாக முதல்கட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். மாணவி பாலியல் […]
ஆகஸ்ட் 1 முதல் UPI -இல் புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள், யூபிஐ பயனர்களின் பல வசதிகளை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இருப்பு சரிபார்ப்பு, தானியங்கி கட்டணம் மற்றும் பரிவர்த்தனை நிலை சரிபார்ப்பு போன்ற சேவைகளைப் பாதிக்கும். தேசிய கட்டணக் கழகம் (NPCI) வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, UPI பயன்பாட்டை அதிகம் சுமை ஏற்படாமல், தடைபாடுகளின்றி […]
தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை. சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்ற பல […]
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தென்மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு கேரளாவில் முன்னதாகவே பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த […]