இந்தி பிக்பாஸ் 19வது சீசனில் ஏஐ போட்டியாளர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழி பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அ ற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. ஒரு சீசன் முடிந்த ஆறாவது மாதத்திலேயே அடுத்த சீசனை துவங்குகிறார்கள். ஜனவரி 19ம் தேதி பிக் பாஸ் 18 கிராண்டு ஃபினாலே நடந்த நிலையில் ஜூலை மாத இறுதியில் 19வது சீசன் துவங்குகிறதாம். […]

நெல்லையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறினர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து இருந்து காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. […]

சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1980ல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை அருணா. இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். கரிமேடு கருவாயன், முதல் மரியாதை உட்பட பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் […]

மத்திய அரசால் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) பெண் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தில் சேருவதன் மூலம், எதிர்காலத்தில் பெண்கள் தங்கள் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு நிதி உதவி பெறுவார்கள். இந்த நோக்கத்துடன் மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், பெற்றோர்கள் மாதத்திற்கு ரூ. 250 உடன் முதலீடு செய்யத் தொடங்கலாம். நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், […]

இன்றைய வாழ்க்கை முறையில், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதாலும், உடற்பயிற்சிக்கு நேரமின்மையாலும் பல உடல்நலப் பிரச்சினைகள் எழுகின்றன. இவற்றில் உடல் பருமன், செரிமானப் பிரச்சினைகள் மற்றும் இதய நோய்கள் ஆகியவை அடங்கும். இந்த சூழ்நிலைகளில் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். இயற்கை மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை நம் உணவில் சேர்ப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். சக்திவாய்ந்த மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலப்பொருள் இஞ்சி. இஞ்சி […]

பாமகவில் கடந்த சில நாட்களாக உள் கட்சி மோதல் நிலவி வரும் சூழலில் அன்புமணிக்கு எதிராக சகோதரி ஸ்ரீ காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் […]

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில், ஜூலை 23-ம் தேதி வரை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பாஜக மற்றும் […]

நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் எனவும், பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 […]