“கொரோனா வேக்சின் போட்டுக் கொள்ளாத கொங்கு மணமகள் தேவை” என்ற தலைப்பில் சமீபமாக ஒரு திருமண விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2023 மே 24ஆம் தேதியன்ற நாளிதழில் வந்த பழைய ஒரு விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் புதியதாக பரவி வருகிறது. அந்த விளம்பரத்தில், கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அதே சமூகத்தைச் சேர்ந்த வேக்சின் போடாத மணமகள் தேவை […]
ஜெய்ப்பூர் அருகே உள்ள சாம்பார் நகரில் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஒட்டுமொத்த ஊரே விற்பனைக்கு வந்துள்ள அதிர்ச்சியான நிலைமை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள சாம்பார் நகரம், உப்பு உற்பத்தி மற்றும் பறவைகள் வரும் முக்கியமான பகுதியாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை, தற்போது மக்கள் நகரம் விட்டு வெளியேறும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. சமீபத்தில், சாம்பார் நகரில் உள்ள வார்டு 22 […]
சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும் முக்கியமான வழிமுறையாக பரிந்துரைக்கப்பட்டு வருகிற நிலையில், சில சமூக வலைதளங்களில் “சன் ஸ்கிரீன் போட்டால் புற்றுநோய் வரலாம்” என்கிற வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தக் குழப்பத்திற்கு முடிவுகொடுத்துள்ளார் சரும நிபுணர் டாக்டர் ஸ்வேதா ராகுல். தற்போதைய சூரிய கதிர்வீச்சு மற்றும் கேஜட் மூலம் வரும் வெளிச்சங்களை மையமாகக் கொண்டு, சருமம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க சன் ஸ்கிரீன் மிகவும் அவசியம் என டாக்டர் கூறுகிறார். […]
இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இரவும் பகலும் உழைக்கிறார்கள். எந்தவொரு நிறுவனத்திலும் on-roll job வேலை இல்லாதவர்கள், சில சமயங்களில் அந்த வேலையில் இருந்தாலும், தங்கள் செலவுகளைச் சமாளிக்க கூடுதல் வேலையைத் தேடுவது மிகவும் பொதுவானது. இந்த வேலை பகுதி நேர வேலை என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் சிலர் அலுவலகம் சென்று முழுநேர வேலை செய்ய முடிவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், ஒரு ஃப்ரீலான்ஸராக(freelancer) வீட்டிலிருந்து வேலை […]
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) அமைப்புகளில் உள்ள விஞ்ஞானி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 148 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விஞ்ஞானி – பி (Scientist ‘B’) 127, விஞ்ஞானி/ இன்ஜினியர்-பி (Scientist/Engineer ‘B’) 9, விஞ்ஞானி- பி (Scientist ‘B’) 12 என மொத்தம் 148 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வி […]
இரத்த சர்க்கரை அளவுகள் அமைதியாக உயர்கின்றன. இந்த அளவுகள் இயல்பை விட உயர்ந்தால், அவை சோர்வு மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், நம்பிக்கைக்குரிய விஷயம் என்னவென்றால், சில குறிப்பிட்ட உணவுகளை தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த அளவுகளை சமநிலைப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நீரிழிவு நோய்க்கு எதிரான பாதுகாப்பாகவும் மாறும். இந்த உணவுகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். எதிர்காலத்தில் நீரிழிவு நோய் […]
திரைப்பட நட்சத்திரங்களின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அமிதாப் பச்சன் முதல் ஆலியா பட், தீபிகா படுகோன் வரை, பெரும்பாலான பிரபலங்களின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது. அந்த வரிசையில் பாலிவுட்டின் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவர் சமீபத்தில் தனது பள்ளி பருவ புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிறது. அவர் தனது தந்தையின் தொழில் காரணமாக 13 வெவ்வேறு பள்ளிகளில் தனது படிப்பை […]
கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்கான இளநிலை நீட் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு […]
இயக்குநர் பாரதிராஜாவின் உடன்பிறந்த மூத்த சகோதரி தங்கத்தாய் தேனியில் காலமானார். கடந்த சில மாதங்களாக சினிமா துறையில் பிரபலங்களின் மரண செய்தி அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் அதிகமான பிரபலங்கள் மாரடைப்பால் இறந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் ஒருவர். மனோஜ் பாரதிராஜா தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார். கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு […]
இன்றைய காலகட்டத்தில், கார்கள், விலையுயர்ந்த மொபைல்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை தவணை முறையில் வாங்குவது பொதுவானது. மக்கள் வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலமும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். கடன் வழங்குவதற்கு முன், வங்கி அந்த நபரின் கடன் வரலாறு, வருமான ஆதாரம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது, இதனால் பொறுப்பான நபர் சரியான நேரத்தில் கடன் தவணைகளை செலுத்த முடியும். ஆனால் […]

