நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மாணவிக்கு உண்மையான விடைத்தாளை காண்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்மா விக்டோரிய என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த ஜுலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள் ஜூலை 31ம் தேதி வெளியானது. அதில் அந்த மாணவி 196/720 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் […]

 டி20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் யூசூஃப் பதானை ஜான்சன் தாக்க முயன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தலத்தில் வைரலாகி வருகின்றது. லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி ஜோத்பூரில் நடைபெற்றது. இத்தொடரில் பில்வாரா கிங்ஸ் , இந்தியா கேபிடல்ஸ் இடையே தகுதித் தேர்வு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது யூசூஃப் பதானுக்கும் மிட்சல் ஜான்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் கடுஞ் சொற்களால் சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. […]

மும்பை விமான நிலையத்திற்கு வந்த கரீனா கபூர் மீது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க கை வைக்க வந்ததால் கரீனா ஷாக்கானார். வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு பாலிவுட் பிரபல நடிகை கரீனா கபூர் வந்திருந்தார். அப்போது அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்தில் ஒரு ரசிகர் அவர் தோளில் கை வைத்து செல்பி எடுக்க நினைத்திருந்ததாக தெரிகின்றது. இதற்காக நெருங்கி வந்து தோளில் […]

மிகக் குறைந்த விலையில் ஜியோ லேப்டாப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜியோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக் குறைந்த விலையில் 4 ஜி ஜியோ ஸ்மார்ட் போன் வெளியிட்டது. இதுமிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனிடையே அடுத்த திட்டமாக ரூ.15000 மதிப்பில் பிரத்யேக ஜியோ ஓ.எஸ்.உடன் மடிக்கணினி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜி யோ நிறுவனம் உலக நிறுவனங்களான குவால்காம் மைக்ரோசாப்ட் போன்ற […]

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் 3வது நாளில் ரூ.200 கோடி வசூலை குவித்துள்ளது. இதை எதிர்பார்த்திரா வெற்றி என  பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த பாகத்தின் வெளியீடு எப்போது என்பது பற்றிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். வசூலில் சாதனை படைத்த பாகுபலி , கே.ஜி.எப். […]

சென்னையில் பெற்ற குழந்தைக்கு சூடு வைத்த தாயையும் அவரது இரண்டாவது கணவரையும் போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் பானு (28), இவருக்கும் வில்ராஜ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விமல்ராஜும் பானுவும் பிரிந்தனர். தற்போது இரண்டாவது கணவர் ஜெகன் என்பவருடன் வாழ்ந்து வருகின்றார். […]

மகளிர் ஆசிய கோப்பைக்கான டி.20 போட்டியில் மலேசிய அணியுடன் மோதி இந்திய அணி வெற்றி பெற்றது. மகளிர் ஆசியக்கோப்பைக்கான டி.20 போட்டிகள் நடைபெற்றுவருகின்றது. முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையுடன் மோதி வெற்றி பெற்ற நிலையில் இன்று மலேசிய அணியுடன் மோதியது. முதல்போட்டியில் மந்தனா , பூஜா, ஸ்னேக் ராணா , ரேணுகா சிங் ஆகிய நான்கு வீராங்கனைகள் விளையாடவில்லை. பதிலாக மேகனா , கிரண் , மேக்னா , […]

மேற்குவங்க மாநிலத்தில் துர்காதேவி சிலைக்கு கீழே மகிஷாசூரன் சிலையை வைப்பதற்கு பதில் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. மேற்கு வங்க மாநில் கல்கத்தாவில் இந்திய இந்து மகாசபைசார்பில் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக துர்கா சிலை அலங்காரம் செய்யப்பட்டு அழகான அமைப்பில் வைக்கப்பட்டது. சிலையின் காலுக்கு கீழே மகிஷாசூரன் சிலைக்கு பதிலாக மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனால் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் […]

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 முதல் 30 வரை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு 10ம் […]

பொன்னியின் செல்வன் பாகம் 1ல் காட்டப்படும் ஊமை ராணி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி பார்க்கலாம். பொன்னியின் செல்வன் பாகம் 1ல் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன் , ஆழ்வார்க்கு அடியான் ஆகிய மூன்று பேரும் புறப்பட்டு சென்று கொண்டிருப்பார்கள். அப்போது அருள்மொழிவர்மனை கொலை செய்ய வரும் கும்பல் தாக்கத் தொடங்கும். அப்போது அவர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்துவிடும். இறுதியாக இக்கட்டான ஒரு கட்டத்தில் யானை மீது ஒரு பெண் […]