வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில், தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த காப்பகத்தில் 30க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர். இந்த குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள், தங்களை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக புகார் கூறியதால், காப்பக உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்காப்பகத்திற்கு சமீபத்தில் குழந்தைகள் நல அலுவலர்கள் திடீர் ஆய்வுக்கு வந்தனர்.சிறுமிகளிடம் தனியாகச் சந்தித்து பேசிய போது, அவர்கள் […]

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்க உள்ளது. இதுவரை பெறப்பட்ட மனுக்கள் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம், நகரங்களில் 43 சேவைகளும், கிராமங்களில் 46 சேவைகளும் 13-15 அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படுகின்றன. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு அதிகபட்சமாக 45 நாள்களில் தீர்வு காணப்படும். உரிய ஆவணங்களுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம் […]

பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம் கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் […]