ரஷ்யா மற்றும் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய், எரிவாயு போன்ற எரிசக்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் நாடுகளை இலக்காகக்கொண்டு, அமெரிக்க செனட் சபை புதிய தடைகள் சட்ட மசோதாவிற்கு 86-11 என்ற கணக்கில் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீதான போரில் மாஸ்கோவின் பொருளாதார வலிமையை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, ரஷ்யாவிடம் இருந்து பெருமளவில் எரிசக்தியை இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். […]

மதுரை மாவட்டம் புதுராமநாதபுரம் ரோடு கணபதி மில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். கீழமாசி வீதியில் உள்ள கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தா (33) ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சாந்தா வேலை செய்த கடையில், பஞ்சவர்ணம் என்ற பெண்ணும் பணியாற்றியதால், அவரது வீட்டிற்குச் சாந்தா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, பஞ்சவர்ணத்தின் மகன் சரவண பிரபு (25) என்பவருடன் […]

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு தடை விதித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், கலைத்துறை பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள் கோவில் தரிசனத்திற்கு வரும்போது, அவர்கள் வருகை தரும் நேரம் மற்றும் உடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன்பாக ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்க […]

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அன்வர்தீன் சிறையில் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முழுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே கைதிகள் சிறையில் அடைக்கப்படும் சூழலில், அரசின் நில மோசடியை அம்பலப்படுத்திய வழக்கில் தொடர்புடையவருக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி ஏற்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த […]

ஆன்லைன் கேமிங் செயலி மூலம் அறிமுகமான சிறுமியை கடத்திச் சென்று கொடூர சித்திரவதை செய்த வாலிபரை, செல்போன் சிக்னல் மற்றும் உணவு டெலிவரி முகவரியை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைன் கேமிங் செயலிகள் வழியாக தானேவைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்ற பிபிஏ மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்கள் தினத்தன்று […]

தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தும் நோக்கில், பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் வரை புதிய வரியை விதிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காலியாகும் மது பாட்டில்களை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டும் ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’ என்ற பெயரில் இந்த புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, 2006-ஆம் ஆண்டின் மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்வதற்கான […]

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கும் அல்லது வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கும் வசதியாக, டாஸ்மாக் நிறுவனம் விரிவான கணக்கெடுப்புப் பணியை தொடங்கியுள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டின் மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்குள்ளும், பிற பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்குள்ளும் மதுக்கடைகள் அமைக்கப்படக் கூடாது. இருப்பினும், பல இடங்களில் […]

யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரூ. 2,000 தொகைக்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை கட்டணம் (MDR) விதிக்க அனுமதி அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சட்டத் திருத்த மசோதாவில், மின்னணுப் பணப்பரிமாற்றங்களுக்கு வங்கிகளும் சேவை நிறுவனங்களும் கட்டணம் […]

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு தீர்வு காணும் வகையில், பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள இருபோக சாகுபடிப் பகுதிகளில் முதல்போக பாசனத்திற்காகவும், அதேபோன்று தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் பெரியாறு அணையில் இருந்து இன்று (ஆகஸ்ட் 8) முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பாசனத்திற்கு வினாடிக்கு […]

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை திரும்பப் செலுத்துமாறு வலியுறுத்தும் போது, கடன் வசூல் முகவர்கள் (Recovery Agents) வரம்பு மீறிச் செயல்படுவதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ➣ கடன் வழங்கிய நிறுவனங்களோ அல்லது வசூல் முகவர்களோ வாடிக்கையாளர்களைக் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நேரத்தை தாண்டி […]