கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில், பயற்சி மருத்துவர் சிகிச்சை அளித்த காரணத்தினால்தான் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி யோகப்பிரியா பிரசவத்திற்காக, கரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவத்திற்கு பின் கர்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின் அடுத்த, இரண்டு தினங்களில் யோகப்பிரியா உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், நீதி […]

வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை வாரிசு அரசியலுக்காக துரோகி என சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார் என மல்லை சத்யா வருத்தம் தெரிவித்துள்ளார். மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, வைகோ முன்னிலையில் இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர். இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா […]

கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற குரு பௌர்ணமி விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை தமிழகத்தில் இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆன்மீக ஆட்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார். கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின், 31வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது முடிந்தது. இதில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்த குரு பவுர்ணமி ஒரு விசேஷமான […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு […]

தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவற்றின் உடல்நலனையும், சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு, பெங்களூரு மாநகராட்சி (BBMP) புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகரித்துவரும் தெரு நாய் தொல்லைகள் நமது நாட்டில் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெங்களூருவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 7 ஆயிரம் பேரை தெரு நாய்கள் கடித்துள்ளதாம். போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால் தான் நாய்கள் இவ்வாறு தாக்குவதாகவும், ஆகையால் அவற்றுக்கு சிக்கன் […]

நம் வாழ்க்கையில் நேரும் இன்பம், துன்பம் அனைத்தும் முந்தைய பிறவிகளில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே நடக்கின்றன என்று நம் மரபு கூறுகிறது. ஆனால், கடவுள் நினைத்தால் அந்த தலைவிதியே மாற்றியெழுத முடியும் என்றும் நம்பப்படுகின்றது. அப்படிப் புனிதமான மாற்றத்துக்கான வாய்ப்பு தரும் அதிசய தலமாகவே கருதப்படுகிறது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் திரியம்பகேஷ்வரர் கோவில். இந்தத் திருத்தலமானது சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். ஆனால், இதில் தனித்தன்மை […]

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 104 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. பணியிட விவரம்: வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: * வேக்சின் கோல்டு செயின் மேனேஜர் பதவிக்கு கணினி அறிவியல் அல்லது தகவல் தொடர்பியல் ஆகிய பாடங்களில் B.E, […]

கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு கடுமையாக பதிலளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருக்கோவில்கள் சார்பில் தற்போது 25 பள்ளிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மட்டும் 22,455 மாணவர்கள் பயின்று வருகின்றனர். […]