அருப்புக்கோட்டை அருகே மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பழனி நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் பாலையம்பட்டி பகுதியில் அதிகாலை 5 மணியளவில் கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நெர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 2 லாரி டிரைவர்கள் உட்பட […]

கேரளாவின் கல்வி துறையில் மாற்றத்தைத் தூண்டும் வகையில் இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய திரைப்படம் ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் சுயாட்சி தேர்தலையும், சமூக அடையாள வேறுபாடுகளை நீக்கும் முயற்சியையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், சினிமாவை தாண்டி கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அந்த படத்தில் ஒரு வகுப்பறை காட்சி மிகுந்த கவனத்தை ஈர்த்தது. அந்த வகுப்பில் மாணவர்கள் அரை வட்டமாக அமர்ந்திருக்க, […]

விசிகவுக்கு தலித் அல்லாத சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஜூலை 4 ஆம் தேதி விசிகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே விசிக தலைவர் திருமாவளவன், “இன்றைய கூட்டத்தில் கூட்டணி பற்றியோ திமுகவிடம் எத்தனை சீட் கேட்க வேண்டும் என்பது பற்றியோ பேச வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன.. அதனால் இவற்றை […]

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கடன் தொகுப்பு திட்டங்களை வைத்துள்ளது. அந்தவகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் இப்போது Tabcedco மூலம் லோன் பெற விண்ணப்பிக்கலாம். tamil nadu backward classes economic development corporation limited என்பதன் சுருக்கமே Tabcedco ஆகும்.  இது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக செயல்படும் தமிழக […]

தமிழகத்தின் கிராமப்புறங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காவல் தெய்வம் கருப்பசாமி. சங்கிலி கருப்பு, ஒண்டி கருப்பு, நொண்டி கருப்பு, மலையாள கருப்பு, சின்ன கருப்பு என பல பெயர்களிலும் வடிவங்களிலும் வழிபடப்படும் இவருக்கு, பெரும்பாலான அம்மன் கோவில்களில் காவல் தெய்வமாக தனி சன்னதி அமைக்கப்பட்டிருப்பது சாதாரணமல்ல. கருப்பசாமி தமிழகம் வந்ததற்கான முக்கியக் காரணம் மதுரை. மதுரையில் அழகர்கோவிலை காவலாக காத்து நிற்கும் பதினெட்டாம் படி கருப்பணசாமி எனும் வடிவமே, தமிழகத்தில் […]

பிரிட்டனின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ விமான நிலையத்தில் பணியாற்றும் இந்திய மற்றும் ஆசிய ஊழியர்களை இங்கிலாந்து பெண்மணி சரமாரியாக சாடியிருக்கிறார். அவரின் பதிவு இணையத்தில் விமர்சனங்களை தூண்டியுள்ளது. அந்த பதிவில், “விமான நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்கள் அல்லது ஆசியா வம்சா வழியை சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களை ஆங்கிலத்தில் பேச சொன்னேன். அவர்களை தன்னை ஒரு இனவெறி பிடித்தவர் என்று கூறுகிறார்கள். அவர்கள் ஏன் இங்கிலாந்திற்குள் […]

தமிழக வெற்றிக் கழகம் என்றஅரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தவெக தலைமையில் கூட்டணி அமைக்க ஏற்றுக்கொண்ட கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் […]

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து வர்ஜீனியா நோக்கிச் செல்லவிருந்த விமானம் ஒன்றில், 27 வயதான தாஜ் மாலிக் டெய்லர் என்ற பயணி, தன்னுடன் பயணித்த ஒரு நபரிடம், “என் லேப்டாப் ஒரு வெடிகுண்டு” என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்ட பயணி அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. எல்லா பயணிகளும் வெளியேற்றப்பட்டு, விமானத்தில் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் முழு சோதனையும் நடத்தினர். முழு விமானத்தையும் ஆய்வு செய்த […]

சென்னை எழும்பூர் காவல் ஆனையர் அலுவலகம் அருகே சரக்கு வாகனம் மோதி ஸ்கூட்டரில் வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் புதுப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதேவி(42) என்பவர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணை மோதிய சரக்கு வாகனம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]