டெல்லி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனதுல்லா கானின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சோதனை செய்ய சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை அமனதுல்லா கானின் வீட்டில் இருந்தவர்கள் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. வக்பு வாரிய வழக்கு தொடர்பாக ஜாமியா நகரில் இருக்கும் அமனதுல்லா கானின் வீட்டில் சோதனை செய்ய போன போது, எம்.எல்.ஏவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகாரியை தாக்கியதாக, வீடியோ ஆதாரங்களுடன் கோர்ட்டில் தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து […]

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் இருக்கும் பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ண பள்ளியில் வசிக்கும் அகிலா, ஸ்ரீகாந்த் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இந்த கல்யாணத்திற்காக ஸ்ரீகாந்த் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்று வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது பற்றி அறிந்த அகிலா, […]

சென்னை, அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் குடியிருக்கும் இளம் பெண் (23). இவர் காவல்துறையில் காவலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை தனது வீட்டில் இருக்கும் பாத்ரூமில் குளித்துள்ளார். அப்போது பாத்ரூமின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக ஒருவர் எட்டிப் பார்ப்பது அவருக்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக ஆடைகளை உடுத்திக் கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, குளியலறையை எட்டிப் பார்த்தது பக்கத்து வீட்டில் […]

சென்னை, தொடக்கக் கல்விக்கு மாவட்ட அளவில் தனியாக பொறுப்பு அலுவலர்கள் இல்லாததால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், அதை தக்கவைக்கவும், பணிகள் தொய்வின்றி நடைபெற தொடக்கப் பள்ளி அளவில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து சிறுபான்மை பள்ளிகளை கண்காணிக்க பள்ளிகூடங்கள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களின் எண்ணிக்கையில், தேவைக்கேற்ப புதிய வட்டாரக் கல்வி அலுவலர் […]

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் அருகில் இருக்கும் வைத்திக்கோவிலில் வசிப்பவர் வடிவேலு (76). இவர் ஒரு விவசாயி. வடிவேலுவின் மனைவி மாரிக்கண்ணு (55). இவருடைய பெரியப்பா சின்னையா மகன் குணசேகரன் (49). இவருக்கு கல்யாணம் ஆகவில்லை. மேலும், இவர் யாரிடமும் பேசாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மாரிக்கண்ணு தனது வீட்டின் அருகே வசித்து வந்த குணசேகரனுக்கு தம்பி என்ற முறையில், தினமும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று […]

சென்னை, தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது;- தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மிகவும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகையை செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல், […]

புதுடெல்லி, மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் இரண்டு முறை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த வீடியோ ஒன்றை டெல்லி காவற்துறையினர் வெளியிட்டுள்ளனர். சாலை விழிப்புணர்வு குறித்தும் ஹெல்மெட் அணிவது பற்றியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “ஹெல்மெட் அணிபவர்களை கடவுள் காப்பாற்றுவார்” என்று பதிவிட்டு டெல்லி காவற்துறையினர் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், சாலை ஓரத்தில் இருந்து ஒரு கார் சாலையின் மறுபுறம் கடக்க […]