ஈரான் போரினால் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மோதலில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 770-ஐக் கடந்துள்ளதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போரை அமெரிக்கா தொடங்கியதிலிருந்து 18 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும், 756 பேர் காயமடைந்துள்ளனர் எனப் பென்டகனின் casualty reporting system தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா போரைத் தொடங்கிய நிலையில், தற்போது […]

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாகப் பந்துவீசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். மக்காய் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 64 ரன்களுக்குச் சுருண்டது. இந்த அசத்தல் ஆட்டத்தின் மூலம் ஸ்டார்க் தனது WTC மொத்த […]

ஒடிசா கடற்பகுதியில் 72,100 டன் இரும்புத் தாதுவுடன் சென்ற எம்வி ஓஷன் வின்னர் (MV Ocean Winner) என்ற பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் வங்காள விரிகுடாவில் மூழ்கியுள்ளது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து சிங்கப்பூருக்குச் செல்ல கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவு 10.42 மணியளவில் இக்கப்பல் புறப்பட்டது. இக்கப்பலில் மொத்தம் 24 பணியாளர்கள் பயணம் செய்தனர். இவர்களில் 20 பேர் சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள், 3 […]

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இன்றைய திமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, கிளைக் கழகங்கள்தான் நமது கழகத்தின் வலுவான கட்டமைப்புக்கு ஆணிவேர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள். கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக் […]

வரும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவரால் ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருதான ‘தேசிய நல்லாசிரியர் விருதுக்கு’ இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் இந்த இரு ஆசிரியர்களுக்கும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கௌரவமிக்க தேசிய விருதுக்கு, புளியம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் […]

2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பிறகு ஸ்பானிஷ் வீரர்களுடன் களத்தில் மோதலில் ஈடுபட்டதற்காக, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர மிட்பீல்டர் லியாண்ட்ரோ பரேடெஸுக்கு உலக கால்பந்து அமைப்பான பிஃபா 10 போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது. மேலும், அவருக்கு 90,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஆத்திரத்தில் ஸ்பெயின் வீரர்களுடன் பரேடஸ் கைகலப்பில் ஈடுபட்டதே இந்தக் கடுமையான நடவடிக்கைக்குக் காரணமாகும். இந்தச் சம்பவத்தில் பரேடஸ் […]

சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387! 101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் […]

சென்னை, தமிழ் நாட்டின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய மாநகரம். 1996-ம் ஆண்டு வரை ‘மெட்ராஸ்’ என்று அழைக்கப்பட்டுவந்தது. வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரங்களுள் ஒன்று. இன்று, சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் சென்னையின் வாழ்வும், வரலாறும் ஆச்சர்யமானவை. சென்னை, பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள நகரம். இது, மதராசப்பட்டினம், மதராஸ், சென்னப்பட்டணம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் மெட்ராஸ் சிறிய கிராமமாகவே இருந்தது. […]

ஓணம் பண்டிகையை கொண்டாடச் சொந்த ஊர் செல்லும் கேரள மாநிலத்தவர்கள் வசதிக்காகச் சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விமானங்களுக்குக் கூட்ட நெரிசல் அலைமோதுகிறது. வார இறுதி விடுமுறையும் பண்டிகையும் இணைந்து வருவதால் பயணிகள் பலர் ரயில்களைத் தவிர்த்து விமானப் பயணங்களை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் வருகை திடீரென அதிகரித்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. வழக்கமான கட்டணங்களை […]

நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தியானது ஆரம்ப மதிப்பீட்டை விட சுமார் 11 சதவீதம் வரை குறையக்கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரும்பை தாக்கும் நோய்கள் மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் காரணமாக, உற்பத்தி 343 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 306 லட்சம் மெட்ரிக் டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.48.18-ஆக இருந்த சர்க்கரை விலை ரூ.55.70 ஆக உயர்ந்துள்ளது. உற்பத்தி […]