பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில், இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சரண் மாவட்டத்தின் மனாஸ் கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.45 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் […]

நாள்பட்ட சிறுநீரக நோய் உலகளவில் பெரும் சுகாதார சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த நோயாளிகள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2ஆம் இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ‘தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, மருத்துவத் துறைக்கே சவாலாக உள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் உலகளாவிய நோய் சுமை பதிவு செய்த தரவுகளின் அடிப்படையில் இந்த […]

வடகிழக்கு பருவமழையின் முதல் இரண்டு சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் மழையின் அளவு குறைந்து காணப்பட்டது. இருப்பினும், இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைய உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் சீனக் கடலில் இருந்து வரும் கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வரும் வடக்குக் காற்றும் ஒருங்கிணைந்து, நாளை (நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை) […]

ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றியமைக்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நவம்பர் மாதத்தில் சுக்கிரன், குரு மற்றும் சனிபகவான் போன்ற சக்திவாய்ந்த கிரகங்கள் நிலை மாறுவது சில ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் தரவுள்ளது. குறிப்பாக, நவம்பர் 11 ஆம் தேதி, குருபகவான் கடகத்தில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். அதைத் தொடர்ந்து, […]

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆகவன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் சுமார் 8 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், அஞ்சலி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் அவருக்கு அதிக ஃபாலோவர்ஸும் கிடைத்திருந்தனர். ஆரம்பத்தில் கணவர் ராகுலுடன் அவர் ரீல்ஸ் செய்தபோது, சில ஃபாலோவர்ஸ் ராகுலின் தோற்றம் குறித்து எதிர்மறையான கருத்துக்களைப் […]

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவச்சியூர் பகுதியில், மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, அதை ‘தீய சக்திகளின் தாக்கம்’ என்று நம்பிய கணவரும் மாமனாரும், மந்திரவாதியுடன் சேர்ந்து அந்த இளம் பெண்ணை மாந்திரீக பூஜை என்ற பெயரில் கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவச்சியூரை சேர்ந்த அகில் (26) என்பவர் தனது காதலியுடன் திருமணம் செய்துகொண்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் அகிலின் மனைவிக்கு […]

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருவதுடன், அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் தொடர்வதால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 14 தமிழக மீனவர்கள், நெடுந்தீவு அருகே […]

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லி செட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் 39 வயது வடமாநிலப் பெண் ஒருவருக்கு கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வந்த ரமேஷ்குமார் (34) என்ற ஓட்டுநருக்கும், அந்தப் பெண்ணுக்கும் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த ரமேஷ்குமாரின் மனைவி, அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, […]

இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை ஒரு தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறிவிட்டது. அரசுப் பலன்கள் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை, 12 இலக்க தனித்துவ எண் கொண்ட ஆதார் அட்டை கட்டாயம் தேவை. பல சமயங்களில் இந்த முக்கியமான அட்டை தொலைந்து போனால் அல்லது அதன் எண்ணை மறந்துவிட்டால் மக்கள் தேவையற்ற பதற்றத்திற்கு […]

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர்களுக்கும், குறிப்பாக எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமான உணவு நம் பாரம்பரிய அரிசி வகைகளுள் ஒன்றான கருங்குறுவை அரிசிக் கஞ்சி ஆகும். இந்தச் சத்து நிறைந்த அரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து தினமும் குடிப்பதன் மூலம், உடலுக்கு நல்ல வலிமை கிடைப்பதுடன், தேவையற்ற கழிவுகளும் நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை வேகமாக குறைய உதவுகிறது என்று இயற்கை உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். […]