கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளக்காரன்பட்டியில், காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் பி. ஃபார்ம் படித்து வரும் வினிதா (21) என்ற அந்த மாணவி, உடல்நலக் குறைவு காரணமாக தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில், அவருடைய முன்னாள் காதலன் ரஞ்சித், வினிதா […]

சென்னை மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலைப் பகுதியில் உள்ள கடற்கரையில், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஆட்டோ டிரைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில், கடற்கரை மணல் பரப்பில் தலையின் பின்புறம் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக மெரினா போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், விரைந்து வந்த மயிலாப்பூர் […]

காலை காபி முதல் இரவு பால் வரை, பால் சார்ந்த பொருட்கள் நம் அன்றாட உணவின் தவிர்க்க முடியாத பகுதியாக உள்ளன. இருப்பினும், சமூக ஊடகங்களில் ஆரோக்கியமான உணவு குறித்து விவாதம் எழும்போது, பால் பொருட்கள் பெரும்பாலும் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், தினமும் பால் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று புற்றுநோயியல் மருத்துவர் ஒருவர் பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது. வைரலான அந்த வீடியோவில், “பசு, எருமை அல்லது […]

தற்போதைய காலகட்டத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பது தனி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக மாறிவிட்டது. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு நிறுத்தலாம் என்று ஆரம்பிப்பவர்கள், பல மணி நேரங்களைக் கடந்து அதிலேயே மூழ்கிப் போவதைப் பார்க்க முடிகிறது. இந்த அதீதப் பழக்கம், மகிழ்ச்சி தருவது போலத் தோன்றினாலும், நீண்டகாலத்தில் பல ஆரோக்கியக் குறைபாடுகளுக்கும், மனநலப் பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது என்று […]

உணவுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க, இன்று பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி (ஃப்ரிட்ஜ்) ஒரு அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. குளிர்ச்சியை வெளியிடுவதன் மூலம் உணவுப் பொருட்களைப் பாதுகாக்கும் ஃப்ரிட்ஜ்கள் சில சமயங்களில் சரியாகக் கூலிங் ஆகவில்லை என்று பலர் புகார் கூறுவதுண்டு. இதற்கு ஃப்ரிட்ஜின் பிரச்சனை மட்டுமின்றி, நாமே செய்யும் சில தவறுகளும் காரணமாக இருக்கலாம் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காஸ்கெட்டை […]

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த வயலாநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட சிலிண்டர் எரிவாயுக் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்து அனுப்பும் பணி இந்த மையத்தில் நடைபெற்று வந்தது. இன்று அதிகாலை வழக்கம் போல ஊழியர்கள் சமையலறையில் உணவு தயாரிக்கும் பணியில் […]

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சிலர் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தி, முன் பின் தெரியாதவர்களை நம்பிச் சென்று, மோசடி மற்றும் மிரட்டலில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. “முதலை வாயில் தலையைக் கொடுப்பது போல” இளைஞர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று சட்டவிரோத கும்பலிடம் சிக்கிக்கொள்கின்றனர். இத்தகைய ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த […]

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) ஒரு முக்கிய அளவுகோலாக உள்ளது. இது, ஒரு மாவட்டத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தியை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. சமீபத்தில் வெளியான 2024–25 பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட முதல் 10 மாவட்டங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதலிடத்தில் ரங்கா ரெட்டி : தெலங்கானாவின் ரங்கா […]

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் மக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்டன. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை, தனிப்பட்ட தேவைகள், வேலை மற்றும் கல்வி எனப் பலவற்றிற்காக தங்களுக்குப் பிடித்தமான, பொருளாதார நிலைக்கேற்ற ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். பொதுவாக, ஸ்மார்ட்போன் பயனர்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஐபோன் (iPhone) விலை அதிகம் என்றாலும், அதன் பாதுகாப்பு அம்சங்கள் மிக அதிகம் என்ற நம்பிக்கையில்தான் பலரும் கூடுதல் பணம் செலவழித்து […]

இனிமையான குரலால் பல ஆண்டுகள் இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்த பிரபல பின்னணி பாடகி மற்றும் நடிகை சுலக்ஷனா பண்டிட், மும்பையில் நேற்று (நவ.6) காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர், தனது 71-வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசை குடும்பத்தின் வாரிசு : சுலக்ஷனா பண்டிட், மிகச் சிறந்த இசைக் குடும்பப் பின்னணியை கொண்டவர். உலகப் […]