உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் அலிகர் பகுதியைச் சேர்ந்த அமித் குமார், தனது மனைவி ரூபி மற்றும் 3 குழந்தைகளுடன் கர்ஹி சௌகாண்டி கிராமத்தில் வாடகைக்கு வசித்து வந்தார். அதே பகுதியில் ராகுல் (36) என்பவரும் வாடகைக்கு தனியாக வசித்துள்ளார். ரூபியும் ராகுலும் ஒரே தொழிற்சாலையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்துள்ளனர். இதனால், ராகுல் தினமும் ரூபியைத் தனது பைக்கில் தொழிற்சாலையில் இருந்து ஏற்றிச் செல்வது மட்டுமின்றி, தினமும் காலையிலும் மாலையிலும் அமித்தின் […]
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வதி அச்சு (39) என்ற இளம்பெண், ‘ஹனிடிராப்’ (Honeytrap) என்னும் வலையை விரித்து 300-க்கும் மேற்பட்ட முதியவர்களை ஏமாற்றி, வீடியோக்களை எடுத்துக் கொண்டு லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்ததாகக் கூறப்படும் சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளையும் குறிவைத்து இவர் பல தந்திரங்களை மேற்கொண்டதாகவும், 2.5 ஆண்டுகளுக்கும் மேலாகப் போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தித் தப்பி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கார் வாடகைக்கு ஓட்டி வந்தவர் அலாவுதீன். இவர், ஓராண்டுக்கும் மேலாக காணாமல் போனதாக அவருடைய மனைவி சுமையா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அலாவுதீனை எங்கு தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அலாவுதீனின் தம்பி ஹாரிஸ், ஹக்கீம் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதால் கைது செய்யப்பட்டார். “நீ என்னுடைய அண்ணியுடன் தவறான […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த முல்லை நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரின் கணவர் வகுப்பறைக்குள் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி, முன்னாள் மாணவர்கள் சிலர் வீடியோ எடுத்துப் பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் முன்னாள் மாணவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு ஆணும் பெண்ணும் பள்ளி வகுப்பறைக்குள் சென்று கதவைப் பூட்டியதை கண்ட மாணவர்கள் […]
இந்திய உணவு முறையிலும், பாரம்பரிய மருத்துவத்திலும் வெந்தயம் வெறும் சமையல் பொருள் மட்டுமல்ல. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று முக்கிய தோஷங்களையும் சமநிலைப்படுத்தும் அபூர்வ மூலிகையாகப் பார்க்கப்படுகிறது. இந்த வெந்தய விதைகளை முறையாக உட்கொள்வதன் மூலம் நாம் பெறும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். வெந்தய நீரின் செரிமான நன்மைகள் : இரவு முழுவதும் வெந்தய விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் […]
நாட்டில் ஃபாஸ்டேக் (FASTag) முறையில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், Know Your Vehicle (KYV) என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த KYV புதுப்பிப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர் குறித்த தகவல்களை அவ்வப்போது புதுப்பிப்பது போல, இனி வாகனம் குறித்த தகவல்களையும் புதுப்பிக்க வேண்டும். இந்த அவசர நடவடிக்கைக்கான முக்கியக் காரணம், சில லாரி ஓட்டுநர்கள் கார்களுக்கான […]
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலும், உள்நாட்டு அரசு நிறுவனங்களை தாங்கிப் பிடிக்கும் வகையிலும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இனி அரசு அலுவலகங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசு நிகழ்ச்சிகளில் கர்நாடக பால் கூட்டமைப்பின் ‘நந்தினி’ தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மத்திய, […]
இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் 12 மாநிலங்களில் மேற்கொள்ளவிருக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (Special Intensive Revision – SIR) நடவடிக்கைக்கு, தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், புதிதாக அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்க மாட்டோம் என அறிவித்திருப்பது அரசியலில் பரபரப்பை […]
நவீன வாழ்க்கை முறையில் பெரும்பாலான வீடுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட ஆர்.ஓ. (RO) குடிநீர் குறித்த முக்கியமான ஆரோக்கிய எச்சரிக்கையை சென்னை உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். நாம் சுத்தமானதாக கருதும் ஆர்.ஓ. நீரால் உடலுக்கு நன்மை இல்லை என்றும், பல அத்தியாவசியச் சத்துகள் இழக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆர்.ஓ. சுத்திகரிப்பு முறையில், நீரில் இயற்கையாக உள்ள தாதுக்கள் (Minerals) மற்றும் வைட்டமின்கள் அனைத்தும் நீக்கப்படுகின்றன. இதனால், ஆர்.ஓ. […]
நாட்டில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வாகனங்களால் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வரும் நிலையில், வாகனங்களுக்குக் காப்பீடு எடுக்காதவர்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. காப்பீடு இல்லாமல் இயங்கும் வாகனங்களைப் பறிமுதல் செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த துங்கலா தனலட்சுமியின் கணவர் 1996 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். விபத்துக்குள்ளான காருக்கு நேஷனல் இன்சூரன்ஸ் […]

