இந்த நவம்பர் மாதம் பல புதிய திரைப்படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை அசைபோட வைக்கும் வகையில், சில சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மீண்டும் வெளியீட்டு (Re-Release) பட்டியலும் நீண்டுள்ளது. திரையரங்கில் இத்திரைப்படங்களைப் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வரிசையில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் மணிரத்னம் எழுதி இயக்கிய காலத்தால் அழியாத திரைப்படமான ‘நாயகன்’ மீண்டும் வெளியாகிறது. 1987 […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் தாக்கிய கல்மேகி புயல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 6 பேரும் பலியான சோகமும் இதில் அடங்கும். புயலின் மையமாக விளங்கிய மத்திய பிராந்தியத்தில், குறிப்பாக செபு தீவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் […]
இன்றைய தினம் (நவம்பர் 5) ஐப்பசி மாதப் பௌர்ணமி என்பதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களிலேயே மிகவும் உயர்ந்ததாக கருதப்படும் இந்த அன்னாபிஷேகம், ஐப்பசி பௌர்ணமியில் சந்திர பகவான் தனது 16 கலைகளுடன் பிரகாசிக்கும் வேளையில் சிவலிங்கத்திற்கு அன்னம் சாத்தி வழிபடப்படுகிறது. இது மனக்கவலைகளை நீக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அன்னாபிஷேக திருநாளில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த 2019-இல் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான மதுரை கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2020-ல் திருமணம் செய்ததாகவும், தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திராவில் உள்ள பாட்டியைப் பார்ப்பதாக சொல்லிவிட்டுச் சென்ற அந்தப் பெண், குழந்தைகளுடன் […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (SIR) நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகித்து வருகின்றனர். இந்த பணிகள் நீதிமன்ற வழக்கு, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களின் களப்பணி என பல்வேறு தளங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த சிறப்புத் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கணக்கெடுப்புப் […]
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்கள் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி, தாங்கள் தயாரித்த பொருட்களை 100 கிலோமீட்டர் தொலைவு வரை அரசுப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் கிராமப்புறப் பெண்களுக்கு நகர்ப்புறச் சந்தைகளில் தங்கள் […]
பணி ஓய்வுக்குப் பின் பெரும்பாலானோருக்குப் பொருளாதார ரீதியாக ஒரு பயம் ஏற்படுவது இயல்பு. மாத வருமானம் நின்ற பிறகு, சேமிப்பு அல்லது குழந்தைகளை நம்பியே வாழ வேண்டிய கட்டாயம் உருவாகலாம். ஆனால், நீங்கள் வசிக்கும் சொந்த வீட்டின் மூலமாகவே நிலையான மாத வருமானம் பெற முடியும் என்றால் நம்புவீர்களா..? ஆம், இந்த நோக்கத்திற்காகவே மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டம்தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டம் (Reverse Mortgage Scheme). இந்தத் திட்டத்தின் […]
தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பசுமைக் குன்றுகளின் மத்தியில் வீற்றிருக்கிறார் குறிஞ்சி நிலக் குமரனான முருகப்பெருமான். மூலிகை மணமும், தெய்வீக அதிர்வுகளும் நிறைந்திருக்கும் இத்தலமே வரலாற்றுச் சிறப்புமிக்க தோரணமலை முருகன் கோவில் ஆகும். அகத்தியர் மற்றும் தேரையர் போன்ற புகழ்பெற்ற சித்தர்கள் தங்கள் அரிய மருத்துவ ஆராய்ச்சிக்காக இந்த மலையை தேர்ந்தெடுத்ததாக பாரம்பரிய நம்பிக்கை கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மூலிகைகள், தியான […]
சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே தேக்கம்பட்டி பகுதியில், 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த பெரியசாமி (65) என்பவர், தனது மகள் கீதா மற்றும் மருமகன் பெருமாள் வசிக்கும் அருந்ததி காலனிக்கு சில நாட்களுக்கு முன் வந்துள்ளார். மகளைப் பார்க்க வந்த பெரியசாமி, கீதாவின் வீட்டிலேயே தங்கியிருந்த நிலையில், தெருவில் சக […]
பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் 41 வயது நடிகை ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சமீபத்தில் நடிகைக்கு ‘Naveenz’ என்ற பெயரில் ஃபேஸ்புக் மூலம் ஃபிரண்ட் ரிக்வஸ்ட் வந்துள்ளது. அந்த நபர் யார் என்று தெரியாததால் நடிகை அதனை ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும், அந்த நபர் மெசஞ்சர் வழியாக நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும், […]

