சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் மத்திய அரசு ஒரு முக்கியத் திட்டத்தை அறிவித்துள்ளது. பிரதமர் இ-டிரைவ் (PM e-Drive) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்கப் பெரும் நிதி மானியத்தை மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. முக்கியப் பகுதிகளுக்கு முழு மானியம் : மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அத்தியாவசிய […]
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், இளம்பெண்ணை வரவழைத்து உல்லாசமாக இருந்தபின், அவருடைய நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக, குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று, லாட்ஜில் அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்த அப்பெண்ணிடம், புதிய நகைகள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை பேசியுள்ளார். குறிப்பாக, தி.நகருக்குச் சென்று புதிய நகைகளை வாங்கித் தருவதாகக் கூறி, […]
அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் விபத்துகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழகப் பொது சுகாதாரத் துறை முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. தீபாவளி நாட்களில் பட்டாசு வெடிக்கும்போது தீக்காயங்கள் மற்றும் அவசர சிகிச்சைகளுக்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அவசர மருத்துவப் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் […]
அண்மைக்காலமாக, நடிகர் அஜ்மல் அமீருக்கு (Ajmal Ameer) எதிரான பாலியல் பேச்சு சர்ச்சை சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ‘அஞ்சாதே’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது, இவருடையதாக கூறப்படும் ஆடியோ உரையாடல்களும், வீடியோ அழைப்புக் காட்சிகளும் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ‘என்டே கேசட்’ (Ente Cassette) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த […]
இந்து மதப் பண்டிகைகளில் மிகவும் கோலாகலமாக, கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத அமாவாசை நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வருகிறது. தீபாவளியின்போது மக்கள் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை மகிழ்விக்கப் பல்வேறு சடங்குகளைச் செய்வார்கள். இதன் மூலம் லட்சுமியின் நேரடி அருளைப் பெற்று, ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தங்கத்திற்குப் பதிலாக […]
தமிழ்நாட்டின் ஆன்மீக தலங்களில் ஒன்றாக திருப்பத்தூர் மாவட்டம், நாற்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா ருத்ராட்ச லிங்க கோவில் மாறியுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து நாற்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோவில், தமிழ்நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத ஒரு பிரம்மாண்டமான சிறப்பை கொண்டுள்ளது. இந்த ஆலயத்தில், ஒன்றரை லட்சத்திற்கும் (1,50,000) மேற்பட்ட ஐந்து முக ருத்ராட்சங்களால் வடிவமைக்கப்பட்ட 9 அடி உயரமுள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது ஆன்மீக அன்பர்கள் […]
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத் தலைமைப் பேருந்து நிலையத்திற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 16 வயது சிறுமி ஒருவர் தனது தம்பியுடன் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவர்களைப் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதை நம்பிச் சிறுமி தனது தம்பியுடன் ஆட்டோவில் ஏறினார். சிறிது தூரம் சென்றதுமே, அந்த ஆட்டோவில் ஆட்டோ ஓட்டுநரின் நண்பர் ஒருவரும் ஏறிக்கொண்டார். […]
80 மற்றும் 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை நளினி. வெள்ளித்திரையில் புகழின் உச்சியில் இருந்த சமயத்தில், ‘மக்கள் நாயகன்’ என்று கொண்டாடப்பட்ட நடிகர் ராமராஜனை இவர் திடீரென திருமணம் செய்துகொண்டது அப்போது பெரும் பரபரப்பை கிளப்பியது. சுமார் 13 ஆண்டுகள் நல்லபடியாக நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை, கருத்து வேறுபாடு காரணமாக 2000-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. சமீபத்தில் […]
தெலங்கானா மாநிலம் மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலைத் தொடர தடையாக இருந்த கணவனை, மனைவியே ஒரு மந்திரவாதியை ஏவிக் கொலை செய்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நாகர் கர்னூல், ஸ்ரீபுரத்தைச் சேர்ந்தவர் ராமுலு (35). பிளம்பராக வேலை செய்து வந்த இவருக்கும், இவரது மனைவி மானசா (35) என்பவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த […]
சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றும் பலர், வாகனங்களுக்காகத் தங்கள் வீட்டிலேயே போதுமான இடவசதி ஒதுக்கத் தவறுவதால், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டுப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தமிழகத்தின் நகர்ப்புறங்களில் பெரும் சவாலாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாடு அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே புதிதாக வீடு கட்டுவோருக்கு வாகன நிறுத்துமிட வசதியை (Parking Facility) கட்டாயமாக்கியிருந்தாலும், தனி வீடுகளுக்கான விதிமுறைகளில் நிலவிய […]

