fbpx

விருத்தாசலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மட தெருவைச் சேர்ந்த கோபி என்பவரின் 17 வயது மகள் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்2 படித்துவந்தார். இந்நிலையில், இவர் நேற்றிரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, …

என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில், நாளை மாலையுடன் அவகாசம் முடிகிறது.

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், …

மின்கட்டண உயர்வை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்றும், அதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, அதிமுகவினர் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் சண்முகம் …

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக எந்த தொகையும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கடந்த 2 நாட்களாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீடுகளுக்கு பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என தவறான …

குரங்கம்மை தொற்று உலகமே எதிர்பார்க்காத வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

75 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வரும் சூழலில், இதுவரை குரங்கம்மை நோய் பரவாத நாடுகளிலும் பரவ தொடங்கிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பையும் தாண்டி குரங்கம்மை தொற்று அதிவேகத்தில் பரவிவருவது உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால், தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து வருவதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50-ஆம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர், ”கொரோனா தொற்றால் …

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் சதிக்கும்பலுக்கு துணைபோகும் விதமாக உளவுத்துறையின் நடவடிக்கை இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் நடந்த வன்முறை தொடர்பாக செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகம் ஒன்று, போராட்டத்தின் பின்னணியில் ஆதிதிராவிடர்கள் உள்ளதாக உளவுத்துறை கூறியதாக தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாணவி கொல்லப்பட்டாரா? …

சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், மாவட்ட செயலாளர், மேலாளர்கள் மீது ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் புகார் அளித்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில், அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அசல் பத்திரங்கள் மற்றும் 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மேலும் சில ஆவணங்களை காணவில்லை …

ஜாமீனில் வெளிவந்த ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை, பிடாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பு என்கிற கண்ணன் (வயது 24). ரவுடியான இவர் மீது திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா புழக்கம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. …

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சென்னை வரும் பிரதமர் மோடி, தனித்தனியாக அழைத்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள போட்டி உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவின் முக்கிய கூட்டாளியான பாஜக இந்த விசயத்தில் இன்னமும் மதில் மேல் பூனையாகவே உள்ளது. பிரதமர் மோடி, …