fbpx

தமிழகத்தில் குரங்கம்மை ஆய்வகம் அமைக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் என நம்புவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் குரங்கம்மை பரவல் குறித்து அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மதுரை, கோவை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் …

காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவைச் சேர்ந்த முத்துக்குட்டி (50) என்பவரது மகள் ரேஸ்மா (20). இவர், கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த …

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து அடுத்தடுத்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால், அங்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனையும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் …

மாணவர்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்’ என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்விக்கூடங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண் குழந்தைகளின் மர்ம மரணங்கள் குறித்த கொடுஞ்செய்திகள் பெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகான காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் …

’டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி சுமூக உறவு காட்டிட விரும்பவில்லை’ என திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முரசொலியில் வெளிவந்த கட்டுரையில், ”அமைச்சர் பெருமக்களுக்கு சம்பிரதாய வணக்கம் என்றும், பிரதமர் மோடியைப் பொறுத்தவரை அதிமுக தரப்பினர் அவரது கிருபை, கடாட்சம் போன்றவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இருப்பது போல அவரது சமீபத்திய நடவடிக்கைகள் படம் …

தீபாவளி பண்டிகைக்கு ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவுறுத்தியுள்ளார்.

தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்வது குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில், நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த ஆண்டு தீபாவளியைப் போலவே, இந்த ஆண்டும் …

பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் …

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ரமேஸ்வர் டேலி பதிலளித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 144 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், சாதாரண மக்கள் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வருவாய் குறைவாக …

ஆளுநர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி போன்ற பதவிகளை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

செல்வந்தர்களை குறிவைத்து அவர்களிடம் ஆளுநர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி, அரசு நிறுவனங்களின் இயக்குநர் பதவி உள்ளிட்ட பெரிய பதவிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கும்பல் …

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலை.யுடன் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி என 105 கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன. தமிழகத்தில் …