மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தெற்குராஜன் வாய்க்காலில் கடந்த 20ஆம் தேதி அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த இளைஞரின் உடல், வாய்க்காலில் அடித்துச் செல்லாமல் இருக்க ஒரு பெரிய கல்லுடன் கட்டப்பட்டிருந்தது. உடலின் பல இடங்களில் வெட்டுக் காயங்களும் இருந்தன. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் சீர்காழி அருகே மேல் குத்தவக்கரையைச் சேர்ந்த லட்சுமணன் (35) […]
சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்யும் நிரூபன் என்ற இளைஞக்கும், இளம்பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதனால், நண்பர்களுடன் வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, அந்தப் பெண் நிரூபனுடன் பைக்கில் புதுச்சேரிக்கு கிளம்பினார். பயணத்தின்போது நிரூபன் மது போதையில் இருந்ததை அவர் கவனிக்கவில்லை. ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை […]
இந்த ஆண்டு தீபாவளி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரவுள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை கணிசமாக உயர்த்தக்கூடிய 2 முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. அகவிலைப்படி (DA) உயர்வு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடி நிதி நிவாரணத்தை வழங்கும். உதாரணமாக 55% அகவிலைப்படி பெற்றவருக்கு ரூ.9,000 ஓய்வூதியம், ரூ.4,950-ஆக இருக்கும். இது 58% ஆக உயர்த்தப்படும்போது, ரூ.5,220 ஆக அதிகரிக்கும். அதாவது மாதத்திற்கு […]
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை வடபழனியில் வாடகை வீட்டில் தங்கி அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி பதுமேகலா அவருடன் உடன் இருந்து கவனித்து வருகிறார். இந்நிலையில், அவர்களின் 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ, ஈரோட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் […]
நடிகை அதுல்யா ரவி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள் மூலம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெள்ளை நிற கட்-அவுட் பேக்லெஸ் உடையில் அவர் வெளியிட்ட இந்த படங்கள், சன்னி லியோனை மிஞ்சும் அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த ஃபோட்டோ ஷூட்டில், அதுல்யா தனது தோள் தெரியும்படி பக்கவாட்டில் போஸ் கொடுத்துள்ளார். கலைந்த கூந்தல், […]
குதிகால் வெடிப்பு, குறிப்பாக மழைக்காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான மற்றும் அசௌகரியமான பிரச்சனையாகும். இதனால் நடப்பதில் சிரமம், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த நிலையில், வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய மற்றும் இயற்கை வைத்திய முறைகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். வெதுவெதுப்பான நீர் : வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் சிறிதளவு ஷவர் ஜெல் சேர்த்து, உங்கள் பாதங்களை 15 முதல் 20 நிமிடங்கள் […]
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திரநகர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் புதர் அருகே கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சைபராபாத் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், இந்த கொடூர கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலை குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 14ஆம் தேதி, […]
பண்டிகை காலங்கள் என்றாலே பலரும் தங்களது வீட்டில் தலைக்கு குளிப்பார்கள். ஆனால், சிலருக்கு தலைக்கு குளித்தவுடன் தலைவலி ஏற்படும். குளிர்ச்சியான நீரில் குளித்தாலும் அல்லது வெந்நீரில் குளித்தாலும் இந்த தலைவலி வரலாம். இது உடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தால் நிகழ்கிறது. குறிப்பாக, தலை மற்றும் மூளையை சுற்றியுள்ள சைனஸ் பகுதியில் வெப்பநிலை குறைவதால் தலைவலி ஏற்படுகிறது. ஈரமான கூந்தல் : பலர் தலையை சரியாக துடைக்காமல் ஈரப்பதத்துடன் வெளியே செல்கின்றனர். […]
சமீபகாலமாக, இளம் வயதினரிடையே மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. எங்கும், எந்த நேரத்திலும் வரக்கூடிய இதய செயலிழப்புக்கு, நமது வீட்டிலேயே இருக்கும் ஓர் அறை முக்கிய காரணமாக இருக்கலாம் என இருதய நோய் நிபுணர் டாக்டர் டிமிட்ரி யாரானோவ் எச்சரித்துள்ளார். உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குளியலறையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மலச்சிக்கல் என டாக்டர் […]
வீடு என்பது அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால், சில நேரங்களில் காரணமின்றி வீட்டில் சண்டை, டென்ஷன், உடல்நலக் குறைபாடுகள், பொருளாதார பிரச்சனைகள் ஏற்படலாம். இத்தகைய எதிர்மறை நிகழ்வுகளுக்கு வாஸ்து தோஷம் ஒரு காரணமாக இருக்கலாம். சரியான திசையில் தூங்குவது, பூஜை அறை, சமையலறை போன்ற பல விஷயங்களில் வாஸ்துவின் பங்கு முக்கியமாக இருக்கிறது. உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளதா […]

