பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தீர்மானம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அவர், தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக செயல்பட்டு வருகிறார். சி.பி. ராதாகிருஷ்ணன் ஒரு பழமை வாய்ந்த அரசியல் அனுபவம் கொண்டவர். தமிழகத்தில் பிறந்த இவர் பாஜக மூலமாக தான் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1998 […]

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது SBI வங்கி. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி ஆகஸ்ட் 1, 2025 முதல் அதன் வீட்டு மற்றும் வீட்டு தொடர்பான கடன் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டது. அதன் படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. முன்னதாக, எஸ்பிஐயின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.50% முதல் 8.45% வரை […]

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல கணேசன் 80 வயதில் காலமானார். அண்மையில் தனது சென்னை வீட்டில் படியில் இருந்து விழுந்ததில் இல. கணேசனுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து சென்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். தியாகராயர் நகரில் உள்ள இல கணேசனின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த பாஜக மூத்த தலைவர் இல கணேசன் உடலுக்கு […]

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நேற்றைய தினம் “கூலி” படம் வெளியாகி தரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படம் முதல் நாளில் ரூ.151 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. பல வருடங்களை ரசிகர்களை கவரும் நடிகராக ரஜினிகாந்த் வளம் வருகிறார். […]

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள முகலாய மன்னரான ஹுமாயூன் கல்லறை வளாகத்திற்குள் அமைந்துள்ள தர்கா ஷெரிப் பட்டே ஷாவில் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான முகலாய மன்னரான ஹுமாயூன் கல்லறை வளாகத்திற்குள் அமைந்துள்ள தர்கா ஷெரிப் பட்டே ஷாவின் மேற்கூரை இன்று பிற்பகல் 3.50 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. […]

இன்று காலை 9.30 மணியளவில் லால்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மினி பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரவிந்த் (வயது 20), சாதிக்பாட்சா (வயது 19), விஸ்வநாதன் (வயது 56) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேருக்கு பலத்த காயமும், 3 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த […]

இந்திய தேர்தல் ஆணையம் (ECI), தேர்தல் முறையில் ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வு கொண்டு வரும் நோக்கில், இந்திய முழுவதும் அல்லது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றாததற்காக, 334 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPS) தேர்தல் ஆணையம் சனிக்கிழமை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டை சேர்ந்த 22 ககட்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இக்கட்சிகள் கடந்த 6 ஆண்டுகளில் எந்தவொரு தேர்தலிலும் பங்கேற்காததுடன், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் அவற்றின் […]

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், பட்டாசு உற்பத்திக்கு பெயர் பெற்ற முக்கியமான இடமாக திகழ்கிறது. சிவகாசி, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளில் இத்தொழில் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. பட்டாசு தொழில் மாநில பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பை அளிக்கிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி வர்த்தகம் இந்தத் துறையில் நிகழ்கிறது. ஆனால், வருமானம் உயர்ந்திருந்தாலும், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக அடிக்கடி வெடி விபத்துகள் நிகழ்கின்றன. இது தொழிலாளர்களின் உயிர்களையும், குடும்பங்களின் வாழ்வையும் […]

இந்தியா முழுவதும் UPI செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரவு 7.45 மணியில் இருந்து gpay, phonepe, paytm போன்ற தளங்களில் பண பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் முழுமையடையாத பரிவர்த்தனைகள், கொடுப்பனவுகள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி புகார் செய்துள்ளனர். இந்த UPI செயலிழப்பு காரணமாக இந்தியாவின் முக்கிய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), HDFC வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடக் […]

சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர், பிரபல தொழில் அதிபரான மணி. இவருக்கு 47 வயது இருக்கும். இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலின் மதுபானக்கூடத்தில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு தீபிகா என்ற தீபலக்ஷ்மியும் மது அருந்த வந்துள்ளார். இவர் மணிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான தோழி ஆவார். பின்னர் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு அந்த ஓட்டலிலேயே அறையெடுத்து தங்கி இரவு […]