சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 108 அவசரகால மருத்துவ சேவை மையத்தில் தமிழக முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவசர சிகிச்சையில் தாமதம் இருக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக திமுக மற்றும் அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக எம்.எல்.ஏ.,க்கள் உளவுத்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில், பூஜிக்கப்பட்ட தேங்காய் ஒன்று ரூ.2.55 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது. பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கையை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் தீவிரப் புயலாக மாறி நவம்பர் 20-ல் ஆந்திராவின் நெல்லூர் – துனி இடையே கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை மையப்படுத்தப்பட்ட அச்சகம் மூலம் அச்சிட்டு, தபால் மூலம் உரிமையாளர்களின் வீடுகளுக்கே அனுப்பும் புதிய திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, தமிழக பக்தர்களின் வசதிக்காக சென்னை, களியக்காவிளை மற்றும் சபரிமலையில் 24 மணி நேர தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் அனுமதியின்றி அணை கட்ட முடியாது எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முதல்வர் விஜய்யின் மௌனம் தமிழகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் ஆகம விதிகள் மீறப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சி கலப்பட ஆட்சி என்பதற்கு நேற்று நடந்த நிகழ்வுகளே சாட்சி என்றும் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் எழுப்பப்பட்ட அரசியல் கோஷங்கள் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மழைக்காலத்தில் உப்பளத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைப்போக்க, நிவாரணத் தொகையை ரூ.7,000 ஆக உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால் 23,979 குடும்பங்கள் பயனடைவர்.