தாய்லாந்து மற்றும் மெக்சிகோவை தளமாகக் கொண்ட மிஸ் யுனிவர்ஸ் என்ற அமைப்பால் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச முக்கிய அழகுப் போட்டி “மிஸ் யுனிவர்ஸ்”. 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இந்த வருடம் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இந்திய போட்டியில் இந்தியா சார்பில் பட்டியிடும் போட்டியாளரை தேர்ந்தெடுக்க “மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா 2025” என்ற போட்டி நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் […]

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிறைவு செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது . வழக்கில், சூரியமூர்த்தி தரப்பு, கட்சி விதிகளின் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை என வாதிட்டது. அதே நேரத்தில், எடப்பாடி தரப்பில், சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்லாததால் அவரால் இத்தகைய கேள்வி […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வந்தது. வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம், ரசிகர்களிடையே கலந்த விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர் கான், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவில் சுமார் […]

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், தனியார் நிறுவன ஒப்பந்தம் ரத்து, ஊதிய உயர்வு, கொரோனா கால ஊக்கத் தொகை வழங்கல், தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். மாநகராட்சி சார்பில் மூன்று முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் […]

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இங்கு படகு போக்குவரத்தை தான் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள சொஹொடா மாகாணம், கடா கிராமத்தை சேர்ந்த 50 பேர் சந்தைக்காக படகில் பயணித்த போது படகு கவிழ்ந்து பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது. கடா கிராமத்தை சேர்ந்த மக்கள் அந்த மாநிலத்தின் பிரபலமான உணவுப் பொருட்கள் சந்தையான கோரோனியோ சந்தைக்குச் நேற்று மதியம் படகு மூலம் சென்று கொண்டிருந்தனர். […]

தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, இன்று (ஆகஸ்ட் 18, 2025) சில இடங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. இந்த மின் தடை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அறிவித்துள்ளது. மேலும் இந்த மின்சார வாரிய பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் முடிந்துவிட்டால், அந்தந்த பகுதிகளில் முன்கூட்டியே மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை […]

உடலுறவு என்பது ஒவ்வொரு மனிதரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப அனுபவிக்கக்கூடிய ஒன்றாகும். சிலர் அதனை விரும்புகிறார்கள், சிலர் அதனை விரும்புவதில்லை. உடலுறவில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை வரக்கூடும் என்று, நம்மில் பலருக்கு சந்தேகம் உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பாப்போம். பொதுவாக உடலுறவில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு எந்த உடல்நல பாதிப்பும் வருவதில்லை. அதனால் இது குறித்து கவலைப்படவோ அல்லது பயப்படவோ தேவையில்லை. சிலர் உடலுறவில் அதிக ஆர்வத்துடன் […]

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தீர்மானம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அவர், தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக செயல்பட்டு வருகிறார். சி.பி. ராதாகிருஷ்ணன் ஒரு பழமை வாய்ந்த அரசியல் அனுபவம் கொண்டவர். தமிழகத்தில் பிறந்த இவர் பாஜக மூலமாக தான் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1998 […]

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது SBI வங்கி. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி ஆகஸ்ட் 1, 2025 முதல் அதன் வீட்டு மற்றும் வீட்டு தொடர்பான கடன் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டது. அதன் படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. முன்னதாக, எஸ்பிஐயின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.50% முதல் 8.45% வரை […]

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல கணேசன் 80 வயதில் காலமானார். அண்மையில் தனது சென்னை வீட்டில் படியில் இருந்து விழுந்ததில் இல. கணேசனுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து சென்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். தியாகராயர் நகரில் உள்ள இல கணேசனின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த பாஜக மூத்த தலைவர் இல கணேசன் உடலுக்கு […]