“ஏ.வி ராஜு பாஜகவில் சேரலாம்.?..” புதிய பரபரப்பை கிளப்பிய காயத்ரி ரகுராம்.!

கூவத்தூர் ரிசார்ட்டில் பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக செய்தியில் பேட்டி கொடுத்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.வி ராஜு. இது தொடர்பாக பேசிய அவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் தனக்கு திரிஷா தான் வேண்டும் என்று அடம் பிடித்ததாக தெரிவித்திருக்கிறார்.

இதற்காக 25 லட்ச ரூபாயை கொடுத்து நடிகை திரிஷாவை கருணாஸ் அழைத்து வந்ததாகவும் எனது பேட்டியில் தெரிவித்து இருந்தார் ஏவி ராஜு. மேலும் தமிழ் சினிமாவின் பல நடிகைகள் கூவத்தூருக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு சினிமா துறையினர் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் உட்பட பலரும் ஏவி ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர்

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் இந்த விவகாரம் தொடர்பாக ஏ வி ராஜுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் யாரும் இது போன்ற ஒரு அவதுறை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகைகளை தரக்குறைவாக பேசியதற்காக நடிகர் சங்கம் அவர் மீது வழக்கு போட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ இது குறித்து மௌனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் ஏவி ராஜுவின் கருத்திற்கு மகளிர் அமைப்புகளும் மௌனமாக இருப்பது இந்த மாதிரியான மனநிலை என தெரியவில்லை இன்று குற்றம் சாட்டி உள்ளார். இதே மனநிலையோடு ஏவி ராஜு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தாலும் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

English Summary: Gayathri Raguram condemns the controversial and hate speech by admk ex member against trisha and tamil cinema actresses.

Next Post

தீபிகா படுகோனே கர்ப்பம்.? ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக தகவல்.!

Tue Feb 20 , 2024
பாலிவுட் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக விளங்கியவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. ஆறு வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த 2018 ஆம் வருடம் தாலி நாட்டில் வைத்து மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 6 வருடங்களுக்குப் பிறகு இந்த தம்பதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தீபிகா படுகோனே தனது கர்ப்ப காலத்தில் இரண்டாவது ட்ரீம்ஸ்டெரில் […]

You May Like