காசாவில் சோகம்! இறந்த தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை 5 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்..

காசாவில் ஏவுகணை தாக்குதலின் போது உயிரிழந்த தாயின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட ஏழரை மாத குழந்தை, 5 நாட்களுக்கு பின்பு உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் காசா பகுதியில் உள்ள ராஃபா பகுதியை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றது. இஸ்ரேல் விமானப்படை மற்றும் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 16 குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் சப்ரீன் அல்-சஹானி, அவரது கணவர் சுக்ரி மற்றும் 3 வயது குழந்தை மலாக் ஆகியோர் உறக்கத்திலிருந்து போது ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகினார். இதில் சுக்ரி மற்றும் மலாக் உயிரிழந்த நிலையில், சப்ரீன் கடுமையான காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். ஏழரை மாத கர்ப்பமாக இருந்த அவரது வயிற்றில் இருந்த சிசுவை, சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் உயிருடன் வெளியே எடுத்தனர். குறைப்பிரசவரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு தாயின் பெயரான சப்ரீன் எனப் பெயர் சூட்டிய மருத்துவர்கள், இன்குபேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஒரு வார காலமாக இன்குபேட்டரில் இருந்த அந்தக் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை குழந்தையின் உறவினர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்றால் என்ன.? அதை உடைப்பதற்கு WhatsApp ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது.? விரிவான விளக்கம்.!!

Fri Apr 26 , 2024
வாட்ஸ்அப்(WhatsApp) செய்திகள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை, அதாவது அனுப்புபவர்களும் பெறுபவர்களும் மட்டுமே செய்திகளைப் படிக்க முடியும். இது மற்றவர்கள் செய்திகளை அலசிப் பார்ப்பதிலிருந்தும் அவற்றைத் தூண்டுவதிலிருந்தும் தடுக்கிறது. வாட்ஸ்அப் ஏன் புதிய ஐடி விதிகளை எதிர்க்கிறது மற்றும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை தவிர்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவானால் வாட்ஸ்அப்(Whatsapp) இந்தியாவிலிருந்து வெளியேறும் என வியாழக்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2021 […]

You May Like