சென்னையில் பகீர் சம்பவம்!! சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு!!

சென்னை கிண்டி அருகே ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ நிலையமும் ஒன்று. அங்குச் சாலையோரம் வசிக்கும் மக்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆசிட் வீசியுள்ளனர். இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். இதில் குழந்தைக்குத் தான் காயம் மோசமாக இருப்பதாக்கத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு நேரத்தில் வந்த மர்ம நபர் ஆசிட் பாட்டிலை வீசியதாகவும். நல்வாய்ப்பாக அது நேரடியாக அவர்கள் மீது விழவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த பாட்டில் அருகே விழுந்த நிலையில், அது தெறித்ததில் சாலையோரம் படுத்துக் கொண்டு இருந்தவர்கள் மீது பட்டுள்ளது. இதில் குழந்தைக்குத் தான் பாதிப்பு மோசமாக ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் அந்த ஆசிட் நெடியைச் சுவாசித்ததால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ஆசிட் வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். அருகே உள்ள சிசிடிவி கேமார காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Read More: ‘யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்…’ நிபுணர்களின் கருத்து என்ன?

Baskar

Next Post

உயிருக்கே ஆபத்து!… கால்சியம் கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்படும் பழங்கள்!… FSSAI எச்சரிக்கை!

Mon May 20 , 2024
Calcium Carbide: பழங்களை பழுக்க வைப்பதற்காக, தடை செய்யப்பட்ட கால்சியம் கார்பைடை பயன்படுத்தக் கூடாது என, வணிகர்கள் மற்றும் உணவு வணிக நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய கலப்பட உலகில், நாம் பெரும்பாலும் இரசாயன சிகிச்சைக்கு ஆளாகியே பழங்களையே உண்கிறோம், இது நன்மையை விட அதிக தீமைக்கு வழிவகுக்கின்றன. இந்தநிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள ஓர் […]

You May Like