ரேணுகா சாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகா சாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.. இவர்கள் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் 17 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது..
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது..
இந்த நிலையில் ரேணுகாசாமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தர்ஷன் உட்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குத் தொடர்பான வாதங்கள் சுமார் 100 நிமிடங்கள் நீடித்த நிலையில், தர்ஷன் உட்பட 7 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒரு வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தர்ஷனுக்கு உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.. இவ்வளவு சாட்சிகள் இருந்தபோதிலும் உயர் நீதிமன்றம் எவ்வாறு ஜாமீன் வழங்கியது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் நாங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து முடிவெடுப்போம்” என்று உறுதியளித்த உச்சநீதிமன்றம் “உயர் நீதிமன்றம் செய்த அதே தவறை நாங்கள் செய்ய மாட்டோம்” என்று எச்சரித்தது. “இது ஒரு கொலை வழக்கு என்பதால் நாங்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறோம்.. வழக்கு விசாரணையின் போது நம்பிக்கையை எதிர்பார்க்கிறதா இல்லையா என்பதைப் பார்ப்போம்” என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்..
தர்ஷனின் ஜாமீன் என்னவாகும்?
உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசாங்கத்தின் வாதத்தை ஏற்று ஜாமீனை ரத்து செய்தால், தர்ஷனும் மற்ற ஏழு பேரும் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். இது அவர்களின் திரைப்பட வாழ்க்கைக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தால், தர்ஷனுக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும். வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை அவர் வெளியில் இருக்க முடியும்.
Read More : 9 மணி நேரம் நிர்வாணம்.. பாத்ரூம் கூட போக விடல..!! டிஜிட்டல் அரெஸ்ட்டால் இரண்டு பெண்களுக்கு நேர்ந்த சோகம்