டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு டீசலும், 15 ஆண்டுகள் பழமையான இலகுரக வாகனங்களுக்கு பெட்ரோலும் நிரப்பக் கூடாது என அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் காற்று மாசுவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக தலைநகர் டெல்லி திகழ்கிறது. மற்ற ஊர்கள் எல்லாம் தூய்மையான தண்ணீருக்காகவும், நல்ல வசிப்பிடத்திற்காகவும், நல்ல வேலை வாய்ப்புக்காகவும் போராடுகின்றன. ஆனால் டெல்லி மட்டும் தூய்மையான காற்றுக்கே போராடும் நிலை இருக்கிறது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளும் ஏராளமான சுற்றுச்சூழல் பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்தியாவில் அதிகமாக மக்கள் தொகை உள்ள நகரமாக உள்ள டெல்லியில் வாகனங்கள் எண்ணிக்கை மனிதர்கள் அளவிற்கு அதிகமாக இருக்கிறது. டெல்லியில் உள்ள வாகனங்கள் வெளியிடும் புகை, அண்டை மாநிலங்களில் உள்ள வயல்வெளி கழிவுகளை எரிப்பதால் உருவாகும் புகை மற்றும் கட்டிட பணிகளால் உருவாகும் மாசு போன்றவற்றால் டெல்லி அதிகமாக மாசடைந்து வருகிறது. டெல்லி மாநகரின் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
மாசு பிரச்சினையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் அம்மாநில அரசால் அடிக்கடி எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பழைய வாகனங்கள் பயன்பாட்ட்டுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலாகிரது. எனவே 10 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு டீசலும், 15 ஆண்டுகள் பழமையான இலகுரக வாகனங்களுக்கு பெட்ரோலும் நிரப்பக் கூடாது என அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் நிலவும் சுற்று சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் பங்க்குகளில் பொருத்தப்படும் கேமராக்கள் வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டு அவை எத்தனை ஆண்டுகள் பழமையானவை? என்பதை கண்டறியும் அதைப்போல அந்த வாகனத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் செயல்பாட்டில் உள்ளதா? என்பதையும் கண்டறியும். இந்த 2 விஷயங்களிலும் அந்த வாகனங்கள் உடன்படாமல் இருந்தால் கேமராக்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதனை அறிந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அந்த வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுப்பு தெரிவிப்பார்கள் என கூறப்படுகிறது.
Read more: கரும்பிற்கு சிறப்பு ஊக்கத்தொகை.. டன் ஒன்றுக்கு ரூ.349 வழங்கப்படும்…! தமிழக அரசு அறிவிப்பு…!!