பெங்களூர் குண்டு வெடிப்பு…! குற்றவாளிகள் சென்னை லாட்ஜில் தங்கி இருந்ததாக NIA அதிர்ச்சி தகவல்…!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஷிமோகாவை சேர்ந்த முஸாவீர் ஹுசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா இருவரும் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்ததாக NIA தகவல் தெரிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள Whitefield பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் சமிபத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தென் மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து அந்த மர்ம நபர் குறித்து தகவல் தெரிவித்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் NIA அறிவித்திருந்தது. இந்த வழக்கு NIA தற்போது விசாரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஷிமோகாவை சேர்ந்த முஸாவீர் ஹுசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா இருவரும் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்ததாக NIA தகவல் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

BJP: 1967-ல் நடந்தது போல 2024-ல் அரசியல் மாற்றம் நடக்கும்...! வானதி சீனிவாசன் உறுதி...!

Sat Mar 23 , 2024
தமிழகத்தில் பாஜக கூட்டணி பெறப்போகும் வெற்றி, 1967ம் ஆண்டைப் போல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2024 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கலும் தொடங்கிவிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 19, பாட்டாளி மக்கள் […]

You May Like