Bank Holidays : செப்டம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது.. முழு லிஸ்ட் இதோ..

bank holiday 1

செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்களுக்கு வங்கி விடுமுறை என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.. இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வங்கிகள் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் மூடப்படும். 2-வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை நாட்களும் இதில் அடங்கும்..


அனைத்து வங்கிகளும் 2வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொது விடுமுறையைக் கடைப்பிடிக்கும்.. அதே போல் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

இந்த நேரத்தில், வைப்புத்தொகை மற்றும் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் பிராந்திய விடுமுறை நாட்காட்டியின்படி தங்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவது அவசியம்..

இருப்பினும், UPI சேவைகள், நெட் பேங்கிங், ATM மற்றும் பிற வசதிகள் உட்பட ஆன்லைன் வங்கி சேவைகளை பெற முடியும்.. எந்தவொரு வருகையையும் திட்டமிடுவதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிட்டு தங்கள் உள்ளூர் கிளைகளை அழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இது கடைசி நிமிட சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

செப்டம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள்

செப்டம்பர் 3, புதன்கிழமை – ஜார்க்கண்டில் கர்ம பூஜை விடுமுறை, ராஞ்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 4, வியாழன் – கேரளாவில் முதல் ஓணம் விடுமுறை, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 5, வெள்ளிக்கிழமை – மிலாடி நபி : குஜராத், மிசோரம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகண்ட், ஆந்திரப் பிரதேசம், மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், கேரளா, டெல்லி, ஜார்கண்ட், தெலுங்கானா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, டேராடூன், ஹைதராபாத், இம்பால், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விட்முறை.

செப்டம்பர் 6, சனிக்கிழமை – (மிலாடி-நபி)/இந்திரஜாத்ரா சிக்கிம், சத்தீஸ்கர். காங்டாக், ஜம்மு, ராய்ப்பூர் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

செப்டம்பர் 12, வெள்ளிக்கிழமை – ஜம்மு-காஷ்மீரில் ஈத்-இ-மிலாத்-உல்-நபி. ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 13, சனிக்கிழமை: இரண்டாவது சனிக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.

செப்டம்பர் 22, திங்கள் – ராஜஸ்தானில் நவராத்திரி ஸ்தபனம், ஜெய்ப்பூரில் உள்ள வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 23, செவ்வாய் – ஜம்மு-காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் ஜியின் பிறந்தநாள், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 27, சனிக்கிழமை: நான்காவது சனிக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.

செப்டம்பர் 29, திங்கள் – திரிபுரா, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மகா சப்தமி/துர்கா பூஜை கொண்டாட்ட விடுமுறை. அகர்தலா, காங்டாக் மற்றும் கொல்கத்தாவில் உள்ள வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 30, செவ்வாய் – திரிபுரா, ஒடிசா, அசாம், மணிப்பூர், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஜார்கண்டில் மகா அஷ்டமி/துர்கா அஷ்டமி/துர்கா பூஜை கொண்டாட்ட விடுமுறை. அகர்தலா, புவனேஸ்வர், இம்பால், ஜெய்ப்பூர், குவஹாத்தி, கொல்கத்தா, பாட்னா மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் உள்ள வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 7, 14, 21, 28: ஞாயிற்றுக்கிழமைகள் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

Read More : ‘வெளிப்படையான பயங்கரவாத ஆதரவை ஏற்க முடியுமா?’: பாகிஸ்தான் பிரதமர் கலந்து கொண்ட SCO கூட்டத்தில் மோடி கேள்வி..

RUPA

Next Post

“நம்ம காதலுக்கு என் புருஷன் தடையா இருக்கான்”..!! கள்ளக்காதலனுடன் ஸ்கெட்ச் போட்ட மனைவி..!! கடைசியில் இப்படி ஒரு நாடகமா..?

Mon Sep 1 , 2025
தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சரூர்நகர் பகுதியில் வசித்து வந்த டிரைவர் சேகருக்கு மனைவி சிட்டி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சேகருக்கும், சிட்டிகும் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சேகருக்கு திடீரென தலையில் இடி இறங்கியது போல், ஒரு செய்தி வந்துள்ளது. மனைவி சிட்டிக்கு ஹரீஷ் என்ற நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த […]
Telangana 2025

You May Like