பேங்க் ஆப் இந்தியா வங்கி 115 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தலைமை மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர், சட்ட அதிகாரி ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது.
பணியிட விவரம்:
தலைமை மேனேஜர் – 15
சீனியர் மேனேஜர் – 54
சட்ட அதிகாரி – 2
மேனேஜர் – 44
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நபர்களின் குறைந்தபட்ச வயது என்பது 28 முதல் அதிகபடியாக 37 வயது வரை இருக்கலாம். மேனேஜர் பதவிக்கு 25 முதல் 32/ 35 வயது வரை இருக்கலாம். சட்ட அதிகாரி பதவிக்கு 32 வயது வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
தலைமை மேனேஜர்: பொறியியல், தொழில்நுட்பம், இளங்கலை அறிவியல், முதுகலை பொறியியல், முதுகலை அறிவியல் அல்லது ஏதேனும் முதுகலைப் பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் கட்டாயம்.
சீனியர் மேனேஜர்: பொறியியலில் இளங்கலை / முதுகலை / M.Sc / பிற முதுகலைப் பட்டப்படிப்புகள் பெற்றவர்கள் தகுதி. அதிகபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
சட்ட அதிகாரி: சட்டத்தில் (Law) இளங்கலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
மேனேஜர்: பொறியியல் இளங்கலை / முதுகலை, MCA, முதுகலை பட்டப்படிப்பு, MBA, CA, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 2–3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
சம்பளம்:
- தலைமை மேனேஜர் பதவிக்கு ரூ.1,02,300 முதல் 1,20,940 வரை சம்பளம்
- சீனியர் மேனேஜர் பதவிக்கு ரூ.85,920 முதல் அதிகபடியாக ரூ.1,05,280 வரை சம்பளம்
- மேனேஜர் பதவிக்கு ரூ.64,820 முதல் ரூ.93,969வரை சம்பளம்
தேர்வு செய்யப்படும் முறை: காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முறை ஆன்லைன் தேர்வு + நேர்காணல் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து செயல்முறையின் விவரங்கள் மேலும் அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு – 125 மதிப்பெண்கள்
- மொத்தம் 125 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
- ஆங்கிலம் – 25 கேள்விகள் (Qualifying only – இறுதி மதிப்பெண்களில் சேர்க்கப்படாது)
- பதவிக்கான முதன்மை பாடம் – 100 கேள்விகள்
- தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடைபெறும்.
- Negative Marking அமலும் செய்யப்படும்.
நேர்காணல் – 100 மதிப்பெண்கள்
- ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
- நேர்காணல் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? பேங்க் ஆஃப் இந்தியா பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2025.
Read more: Flash : குட்நியூஸ்! தொடர் சரிவில் தங்கம் விலை..! எவ்வளவுன்னு செக் பண்ணுங்க..!



