’மே 1 முதல் ஜாக்கிரதையா இருங்க’..!! இந்த மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை..!! – வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்களில் மே 1ஆம் தேதி முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மே 5ஆம் தேதி முதல் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். அதிகமான நீர்போக்கினால் உடல் சோர்வு ஏற்படும். மேலும், உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரனம், மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதைத் தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம். எங்குச் சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக்கொள்வது அவசியம். எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோமோ உடல் நிலை அவ்வளவு சீராக இருக்கும்.

கோடை காலத்தில் பொதுவாகக் காபி மற்றும் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காபி மற்றும் டீ உடல் வெப்பத்தை அதிகரிக்கும் குணங்கள் கொண்டவை. வெயில் காலத்தில் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரிசி, சப்பாத்தி போன்றவற்றை வழக்கம்போல் சாப்பிடுவதுபோல் சாப்பிடலாம். உணவில் மோர் தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்சத்து அதிகம் உள்ள பழங்கள் காய்கள் அருந்தலாம்.

சுட்டெரிக்கும் வெயிலில் உடலைச் சீராக வைத்துக்கொள்ள, ஒவ்வொருவரும் அதற்குத் தகுந்த உணவுமுறையில் கட்டுப்பாட்டை கொண்டு வருவது அவசியம். ஆரோக்கியமான உணவு முறைகளை கடைபிடித்து வெயில் காலத்தில் நம்மை நாமே பாதுகாத்து கொள்வது தான் புத்திசாலித்தனம்.

Read More : ’இது இருந்து என்ன புண்ணியம்’..? ’வருவாய் குறையுதே’..!! மூடப்படுகிறதா சார் பதிவாளர் அலுவலகம்..?

Chella

Next Post

ITR Filling: படிவம் 16 என்றால் என்ன? ஆன்லைனில் நீங்களே வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? சுலபமான வழிகள்..

Fri Apr 26 , 2024
ITR Filling: வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான ஒரு முக்கிய ஆவணம் படிவம் 16 ஆகும், வேலை செய்பவர்கள் ITR ஐச் சமர்ப்பிக்க படிவம் 16 தேவை. வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யப்படும் மதிப்பீட்டு ஆண்டின் ஜூன் 15 ஆம் தேதி அல்லது அதற்கு முன் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 ஐ வழங்குவதற்கு நிறுவனங்கள் பொறுப்பாகும். படிவம் 16 என்பது 1961 இன் பிரிவு 203 […]

You May Like