விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில், மீனா மனதை மாற்ற ரோகிணி தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறாள். மனோஜை திருமணம் செய்து கொள்வதற்கு முன் வங்கி ஊழியர் ஒருவரை காதலித்ததாகவும், அவர் கிரிஷ் இருப்பதை தெரிந்து கொண்டு விட்டு சென்றதாக கூறுகிறாள்.
மனோஜை நான் உண்மையாக காதலிக்கிறேன். கிரிஷ் விஷயத்தை சொன்னால் மனோஜ் தன்னை விட்டு போய்விடுவார் என்ற பயத்தில் தான் உண்மையை மறைத்துவிட்டேன் மீனா என கண்ணீர் வடிக்கிறாள். நான் சொன்ன பொய்யை நியாயப்படுத்தவில்லை. ஆனால் நான் சொன்ன பொய்க்கு ஒரு நியாயம் இருக்கு என சொல்கிறார் ரோகிணி.
இதை கேட்டு எமோஷனல் ஆன மீனா உன் நிலமை எந்த பொண்ணுக்கும் வரக் கூடாது. ஆனால் அதற்காக ஒரு குடும்பத்தை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம். நீ உண்மையை மறைப்பதற்கு உன் பக்கம் ஆயிரம் நியாயம் இருக்கு. ஆனா எனக்கு தெரிஞ்சும் நான் மறைச்சுட்டு இருக்கேனே என் பக்கம் எந்த காரணமும் இல்லையே. ஒரு நாள் உண்மை வெளிய தெரியும். அன்னைக்கு உன்கூட சேர்ந்து நானும் ஒரு குற்றவாளியா தான நிப்பேன் என சொல்லிவிட்டு கீழே செல்கிறார் மீனா.
அங்கு இரவில் இதை நினைத்து தூக்கம் வராமல் இருக்கும் மீனாவிடம், என்ன ஆச்சு என முத்து கேட்க, டென்ஷன் ஆகிறாள் மீனா. நீ எதையோ மறைக்குற அதுமட்டும் தெரியுது என சொல்லிவிட்டு செல்கிறார் முத்து. பிறகு தங்களின் ரூ.10 லட்சம் ஆர்டரை பற்றி வீட்டில் சொல்கிறார் மனோஜ். கோர்ட்டுடன் வந்த மனோஜை முத்து வழக்கம் போல் கிண்டலடிக்க ரோகிணி அதற்கு பதில் தெரிவிக்கிறார். உடனே முத்துவுக்கு சப்போர்ட் செய்து மீனா வரவே, பயத்தில் ரோகிணி ஓரமாக ஒதுங்குகிறார்.
அதன்பின் நம்ம கூட உண்மையா ஒரு ஆள் இருந்தால் எல்லாமே நல்லதாதான் நடக்கும் என ரோகிணியை பற்றி மனோஜ் கூற, ரோகிணி மீனாவை பார்க்கிறாள். உடனே விஜயா நீ சொல்றது சரிதான் மனோஜ்.. எல்லாம் ரோகிணி வந்த நேரம் உன் வாழ்க்கைல எல்லாமே நல்லதா நடக்குனு சொல்கிறாள். இதை எல்லாம் பார்த்த மீனா உண்மையை வெளியே சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள்.
Read more: அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இந்திய இயக்குநர்கள்: ஒரு தமிழ் இயக்குனர் கூட லிஸ்டுல இல்ல..!



