BEL நிறுவனத்தில் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…! B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Deputy Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.Eதேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.


விண்ணப்பதாரர்களுக்கு பிரிவிற்கு ஏற்றாற்போல் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பணிக்கு முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.30,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Detail%20advertisement-15-09-22.pdf

Vignesh

Next Post

விமான விபத்து...! 6 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்...! தொடரும் மீட்பு பணி...!

Sun Nov 13 , 2022
டெக்சாஸின் டல்லாஸ் எக்சிகியூட்டிவ் விமான நிலையத்தில் நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது இரண்டு உலகப் போர் கால விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன. விமானங்கள் உடனடியாக தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததால் 6 விமான ஊழியர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போயிங் B-17 குண்டுவீச்சு விமானத்திற்கும் சிறிய விமானத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இரண்டு விமானங்களிலும் உள்ள விமானிகளின் நிலை இன்னும் […]
IMG 20221113 092114

You May Like