உஷார்!. குறைவான நேரம் தூங்குகிறீர்களா?. மூளைக்கு ‘மதுவை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்’!. நிபுணர் எச்சரிக்கை!.

w 1280h 720imgid 01k0vn19zbwshtmjped0g4fybhimgname sleeping 10 1 1753274689515

தூக்கம் என்பது நல்ல ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அம்சம் என்று கருதப்படுகிறது. மருத்துவ சமூகம் அதன் முக்கியத்துவத்தையும், தூக்கமின்மை பல சுகாதார நிலைகளை எவ்வாறு தூண்டுகிறது என்பதையும் அடிக்கடி வெளிப்படுத்துகிறது. இந்தநிலையில், நரம்பியல் துறையில் 30+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பிரசாந்த் கட்டகோல், செப்டம்பர் 22 அன்று இன்ஸ்டாகிராம் பதிவில், மோசமான தூக்கத்தால் மூளையில் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.


இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அனைத்தும் வேலைகளும் மொபைல் போனிலேயே செய்து முடித்துவிடுகிறோம். இதுதவிர அதிக நேரம் மெசேஜ் அனுப்புவதற்கோ அல்லது சமூக ஊடகங்களில் ‘ஸ்க்ரோல்’ செய்வதற்காகவும் தூக்கத்தை நாம் செலவிடுகிறோம். து உங்கள் மூளைக்கு மதுவை அருந்தும் அளவிற்கு அல்லது அதைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று நரம்பியல் நிபுணர் எச்சரிக்கின்றார்.

மோசமான தூக்கம் உங்கள் மூளையை எவ்வாறு பாதிக்கிறது? தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்பு, மதுவால் ஏற்படும் பாதிப்புக்கு ஒப்பானது. அதனால் தான், தூக்கமில்லாத ஒரு இரவுக்குப் பிறகு நீங்கள் மயக்கம், குழப்பம் போன்ற உணர்வுகளை அனுபவிப்பது ஆச்சரியம் இல்லை. அது மது போதையிலிருந்து எழும் “ஹேங்கோவர்” மாதிரி தான். “தூக்கமின்மை உங்கள் கவனத்தை சிதைக்கும், நினைவாற்றலை மோசமாக்கும், மேலும் மனநிலை மாற்றங்களை (mood swings) ஏற்படுத்தும் என்று நிபுணர் பிரசாந்த் கட்டகோல் கூறுகிறார்.

ஆனால் முக்கியமான சிக்கல் என்னவென்றால் லேசான ஹேங்கொவர் போன்ற விளைவு பாதிக்காது என்று நீங்கள் நினைத்தாலும், மூளையில் மோசமான தூக்கத்தின் தாக்கம் மிக நீண்ட காலம் நீடிக்கும் என்று டாக்டர் கட்டகோல் எச்சரிக்கிறார். மேலும், “மது உங்களை தற்காலிகமாக மரத்துவிடும், ஆனால் மோசமான தூக்கம் மூளை மற்றும் உடலில் நீடித்த எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

எப்படி சரிசெய்வது?உங்கள் தூக்கத்தை எவ்வாறு சரிசெய்வது மற்றும் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எப்படி? எளிய பழக்கவழக்கங்கள் மூளையில் மோசமான தூக்கத்தின் எதிர்மறையான தாக்கத்தை மாற்றியமைக்க உதவும் 3 குறிப்புகளை கட்டகோல் பகிர்ந்துள்ளார்.

“வார இறுதி நாட்கள் உட்பட, ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்குங்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது 7 மணிநேரம் தடையின்றி தூங்குங்கள். இரவு 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.” அவர் கூறியதைக் கவனித்தால், அவை எல்லாம் ஒன்றையே அதாவது நேரத்தையே மையமாகக் கொண்டவை ஆகும். தூங்கும் நேரம், தூங்கும் கால அளவு, எழும் நேரம் ஆகியவை. “தூக்கத்தை நம் அட்டவணையில் சிறந்த முறையில் பொருத்திக்கொள்வதுதான், தூக்கத்திறன் மேம்படும் முதல் படி” என்று அவர் வலியுறுத்துகிறார்.

“நல்ல தூக்கம் கிடைக்க வேண்டும் என்றால், சிறந்த கண் போர்வை(முகமூடி) தலையணை, கருப்பு திரைகள், அல்லது தூக்கத்துக்கு ஏற்ற இசை” எல்லாம் தேவைப்படும். எனவே, “சாதாரண விஷயங்களைத் தவிர்த்து, நேரத்தை ஒழுங்குபடுத்தினால் தூக்க நலம் திரும்பும், ஆனால் நேரத்தை முன்னுரிமைப்படுத்துவது மீண்டும் பாதையில் செல்ல உதவுகிறது. இங்கிருந்து முக்கிய குறிப்பு? சரியான நேரத்தில் தூங்குங்கள், சரியான நேரத்தில் எழுந்திருங்கள், வாரத்தின் அனைத்து நாட்களிலும் படுக்கை நேரத்தை சீராக வைத்திருங்கள்.

Readmore: மகிழ்ச்சி செய்தி…! விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும்…! துணை முதல்வர் தகவல்…!

KOKILA

Next Post

தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...!

Wed Sep 24 , 2025
தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்; 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸுக்கு கூடுதல் சீட்கள் வேண்டும் என்று கட்சியினர் தங்களுடைய ஆசையை சொல்கிறார்கள். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தாது. கட்சியினர் கருத்துகளை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவிப்பேன். ஆனால், முடிவு எடுப்பது காங்கிரஸ் தலைமையும், பொறுப்பாளர்களும் தான். தவெக-வுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் […]
tvk vijay 2025 1

You May Like